பதாகை ஏந்தி தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன மாணவிகள்

உலக தாய்மொழி தினமான இன்று சீனாவில் உள்ள யுனான் மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், செஞ்சீனத்தில் தமிழை பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி என்ற கிகி ஜாங் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை … Read more

ஆப்பிள், கூகுளின் புதிய பிரைவசி திட்டங்கள் மெட்டாவை ஏன் பாதிக்கின்றன?

பல ஆண்டுகளாக இலவச சேவைகளை வழங்கிவரும் டெக் ஜாம்பவான்கள், விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால், தரவு பாதுகாப்பில் ஏற்பட்ட கேள்விக்குறி காரணமாக தனியுரிமை பாதுகாப்பில் நிறுவனங்கள் அதீத கவனம் செலுத்தி வேண்டியிருந்தது. பயனர்களின் ஆன்லைன் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சில புதிய யுத்திகளை கையாள வேண்டியதாக இருந்தது. குறிப்பாக பேஸ்புக், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக லாபம் நோக்கத்தினால் நம்பிக்கையற்ற நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் … Read more

#BREAKING || தஞ்சை கிருஸ்துவப்பள்ளி மாணவி தற்கொலை வழக்கில்., சற்றுமுன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த சிபிஐ.!

கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த, அரியலூர் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன் மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக … Read more

பட்டப்பகலில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடன் கைது <!– பட்டப்பகலில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்க… –>

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பட்டப்பகலில் வீடு ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கொள்ளையன் ஒருவன் தனது வாகனத்தை போல எடுத்து ஓட்டிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பேய்குளம் பஜார் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை பூட்டாமல் அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணமல் போயிருந்ததைக் கண்டு, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த … Read more

தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன்?: ராமதாஸ் கேள்வி

சென்னை: தாய்மொழி தமிழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் தமிழர்கள், நமது மாநிலத்தில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன் என பாமக் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பன்னாட்டு தாய்மொழி நாள் 23வது ஆண்டாக கொண்டாடப்படும் … Read more

'திறமை இருந்தும் பணம் இல்லையே'- உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவி

தஞ்சாவூர் அருகே பார்வையற்ற குடும்பத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி, இசைக்கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். திறமை இருந்தும் படிப்பதற்கு வாய்ப்பின்றி தவித்து வருகிறார் அவர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த புதுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மாணவி, பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். சந்தியா மட்டுமின்றி அவரது தாய், சகோதரர்கள் என குடும்பமே பார்வையற்றவர்கள். தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், இசை மீது தீரா காதல் கொண்டுள்ளார். இசைக்கல்லூரியில் பயின்று, பாடகியாக … Read more

போலி தங்கம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய பெண் வேட்பாளரின் கணவர் தப்பியோட்டம்!

வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட  பெண் வேட்பாளரின் கணவர், ஓட்டுக்குப் பதில்’ வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளை அளித்துள்ளார். ஆனால் அவை வெறும் மஞ்சள் உலோகம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆம்பூரில் உள்ள 1,000க்கும் அதிகமாக  மக்கள் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். வேலூர் உள்ளாட்சியின் 36வது வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, திமுக பிரமுகரான ஒருவர், தனது மனைவியை சுயேட்சையாக நிறுத்தினார். அவரை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கட்சி அவரைக் கேட்டுக் கொண்டது. ஆனால் தன் மனைவி … Read more

மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றுடன் அவகாசம் நிறைவு.!

இளநிலை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 28-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக 30-ஆம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வுகள் முடிக்கப்பட்ட நிலையில், முதலாம் … Read more