நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,13,073 பேர் – டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்கவால் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்கள் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே … Read more

'என்னயா பிடிக்க வர?' – தீயணைப்பு துறை வீரரை கடித்த பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த நிலைய அலுவலரின் கையை கடித்தது. ஒரே இரவில் 3 மலைபாம்புகள் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கல்லூரி வகுப்பறையின் ஓரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது அந்த மலைப்பாம்பு தீயணைப்பு நிலைய அலுவலரான கணேசன் என்பவரின் கட்டை … Read more

TNPSC GROUP 2, 2A: தேர்வு தேதி நாளை அறிவிப்பு; என்னென்ன பதவிகள், என்ன தகுதி?

Tamilnadu TNPSC Exam Update : தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் டிஎஸ்பிஎஸ் குருப் 2 பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குருப் 2 மற்றும் குருப் 2 ஏ பிரிவில், சுமார் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்: குருப் 2 தேர்வு எழுத விரும்புவோர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி … Read more

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த அயல் நாட்டவர்.! சட்டத்திற்குப் புறம்பாக பிரச்சாரம்.!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  பல்வேறு உத்திகளை கையாண்டு நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அயல் நாட்டவர் ஒருவர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் தமிழக கட்சி ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிசினஸ் விசாவில் தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு பேருந்தில் பயணம் … Read more

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற அதிசயம்.. <!– விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத… –>

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.வெல்லிமலைபட்டினம் விராலியூர் பகுதியில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் குடிக்க காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஊருக்குள் புகுந்த நிலையில், விளை நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயத்தை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே காட்டுப் பகுதிக்கு சென்றது.இதனை அங்கிருந்த நபர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  Source link

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நிறைவு: இறுதி நாளில் தலைவர்கள் பேச்சின் ஹைலைட்ஸ்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் … Read more

மனைவியின் பிரிவு; காதல் தோல்வி விரக்தி – போனில் பேசியபடியே இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர், கேரளாவில் உள்ள உறவினருடன் வீடியோகால் பேசியபடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரியாஸை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றார். இதையடுத்து ரியாஸ் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக … Read more

தேர்தல் களத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்… கவனம் ஈர்க்கும் கபிலன்!

Tamilnadu Local Body Election Update : இந்த உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு தனித்துவம் உண்டு. முன்பு எந்த தேர்தலாக இருந்தாலும் சிலராவது அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என அடையாளம் காட்டப்படுவார்கள். ஆனால் நடப்பு உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க தி.மு.க சார்பில் போட்டியிடும் அத்தனை பேருமே கிட்டத்தட்ட ஸ்டாலின் கோஷ்டி தான்.      தென் மாவட்டங்களில் கோலோச்சி வந்த கலைஞரின் மூத்த மகன் மு.க அழகிரி முழுமையாக தனது அரசியல் நடவடிக்கைகளை … Read more

திமுகவினரின் கடைசிநேர சதித்திட்டம் : மொத்தமாக போட்டுடைத்த பாமக கணேஷ்குமார்.!

குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: முதல்வரின் பெயரால் முறைகேடு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் சார்பில் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும்  அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட … Read more

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? <!– யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? –>

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் கொண்ட நபர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2 சதவீதம் பேர் ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர். வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் … Read more