வாக்குச் சாவடியில் தகராறு…பெண் போலீசின் போனை பறித்த திமுக பிரமுகர்; பரபரப்பு வீடியோ!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று சுமூகமாக முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி 115வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும் தி.மு.க. 115-வது வட்டத்தின் வட்ட செயலாளருமான ஜி.வெங்கடேஷ் வாக்கு சாவடியில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருவல்லிக்கேணி Immaculate பள்ளியில் இருந்த வாக்குச்சாவடிக்கு வந்த வெங்கடேஷை, செல்போனுடன் வாக்குச்சாவடி … Read more

நடுவழியில் திடீரென கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கள்ளகிணறு அருகே  நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி 47 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் வேறொரு பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாராபுரம்-கோவை … Read more

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் <!– தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு … –>

தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாளை 21 ஆம் தேதி அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும்  சென்னையில் இரு வார்டுகளிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒரு வார்டிலும் மறு தேர்தல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியிலும், திருவண்ணாமலை நகராட்சியிலும் தலா ஒரு வார்டில் மறு தேர்தல் சென்னை மாநகராட்சியில் வண்ணாரப்பேட்டை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைக்குப்பம் வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்: முத்தரசன்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தையும், அதன் உடைமைகளையும் கையகப்படுத்த தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் முழு நிர்வாகத்தையும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராஜர் திருக்கோயில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே பாகுபாடு மற்றும் சாதி தீண்டாமை காட்டுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. வரலாற்று தொன்மையும், … Read more

திருப்பூர்: அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளகிணறு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின், முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதையறிந்த ஓட்டுநர், உடனடியாக நடுவழியிலேயே பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 47பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். <blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>தாராபுரம்-கோவை சென்றகொண்டிருந்தஅரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று சென்றுவிட்டது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிலை தடுமாறாமல் உடனடியாக நிறுத்தப்பட்டது.<br> <a href=”https://twitter.com/hashtag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#இடம்</a>: <a … Read more

உக்ரைனில் உள்ள 1000 தமிழர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை

Intensive work to collect details of 1000 Tamil people in Ukraine: உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் … Read more

தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது., திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது – எடப்பாடி கே. பழனிசாமி.!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.  இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது. நேற்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு … Read more

பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி.! ஹேன்ட்-பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் <!– பேருந்து சக்கரம் நடுவழியில் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்… –>

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47 பயணிகளுடன் நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கள்ளகிணறு பகுதியை ஆடைந்த போது அதன் முன் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் வேறொரு அரசு பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு … Read more

மறுவாக்குப்பதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்

சென்னை: நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணிக்குப் பின்னர் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி … Read more

கன்னியாகுமரி: இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பரம்பை பகுதியில் உள்ள குடியிருப்புகளில், சிலர் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு வாகனத்தில் வந்த இளைஞர்கள், இறைச்சிக் கழிவுகளை கொட்ட முயற்சித்தனர். உடனடியாக அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சிக் கழிவுகளை சேகரித்து கொட்டி வருவது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும், … Read more