மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி <!– மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி… –>

கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது  என்று வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். Source link

மார்ச் 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

உக்ரைன் நிபந்தனைகளை ஏற்றால், ஒரு நொடியில் போர் நிறுத்தப்படும் – ரஷ்யா

Ukraine Russia war latest updates in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் 4 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிப்பு ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளுக்கு இணங்க உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கார்கிவ், கீவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் … Read more

கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து அடுத்த மாவட்டம்.! சூர்யா திரைப்படம் வெளியிட தடை?! 

நடிகர் சூர்யா வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை, ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என, கிருஷ்ணகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவருக்கு, பாமகவை சேர்ந்த த ஆறுமுக என்பவர் கடிதம் எழுதியுள்ளார். அவரின் அந்த கடிதத்தில், “திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02 ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார்.  இருளர் சமுதாய … Read more

நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் பேசும் வீடியோ வைரல் <!– நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிறுவ… –>

நாகை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான எறி பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவங்கி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்பு ராஜ் வந்திருந்தார். அங்கு வரிசையில் நின்று இருந்த பெண்களிடம் வணக்கம் தெரிவித்து வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சி தலைவரிடம், வரிசையில் நின்று இருந்த ஒரு சிறுவனும் அவருக்கு வணக்கம் தெரிவித்தான். பின்னர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசிய சிறுவன், நான் கவின்மாறன் ஐ.ஏ.எஸ் என்றும், நானும் உங்களை போல … Read more

தமிழகத்தில் இன்று 158 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 56 பேர்: 512 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,171. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,10,740. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 85,20,519 பேர் வந்துள்ளனர். சென்னையில் 56 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

நெல்லையில் சந்திப்பு… உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ- மாணவிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

CM Stalin meets Ukraine return medical students: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் சந்தித்து பேசினார். உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. இதனிடையே தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசோடு, … Read more

மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் – சீமான்..!

மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிய விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித்தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணியப் … Read more