திருமண விழாவிற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தை மூழ்கிய குடும்பம்..!

திருமண விழாவிற்காக பொருத்தப்பட்ட மின்விளக்கை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவருக்கு உமா தேவி என்ற மனைவியும் ஏழுமலை  மகனும் உள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கு அலங்கரிகரிகப்பட்ட வயர்கள் மீது எதிர்பாராதவிதமாக கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை … Read more

கோவில் தேரோட்டத்தில் திடீரென தேர் சாய்ந்ததால் பரபரப்பு <!– கோவில் தேரோட்டத்தில் திடீரென தேர் சாய்ந்ததால் பரபரப்பு –>

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில் தேர் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எலவனாசூர்கோட்டை பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் காலை தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பயணித்து வந்த நிலையில், மேலப்பாளையம் சாலையில் வந்தபோது திடீரென பெய்த சாரல் மழையால் சக்கரம் வழுக்கி தேர் சாய்ந்தது. இதில் தேரில் அமர்ந்திருந்த பூசாரி சுந்தரம் என்பவர் லேசாகக் … Read more

'இது மோடி அரசின் தமிழர் விரோத நிலைப்பாடு' – மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு ஒன்றிய … Read more

5 மணி வரை 'டெட்லைன்’ – அல்லிநகரம் திமுக நகராட்சி தலைவருக்கு தங்கத்தமிழ்செல்வன் எச்சரிக்கை

திமுக தலைமைக் கழக உத்தரவுபடி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கூட்டணி தர்மத்தை மீறி நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா மாலை 5 மணிக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி கட்சி தர்மத்தை மீறி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கவுன்சிலரான ரேணுப்ரியா, மற்றும் திமுகவின் இதர கவுன்சிலர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் … Read more

பதவி படுத்தும் பாடு… ஸ்டாலின் எச்சரித்தும் அடங்காத ‘தலை’கள்!

DMK dissenters not resigning even though stalin warned to necessary action: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக எச்சரித்துள்ள நிலையிலும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான … Read more

அந்த அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி வாக்குமூலம்.! 

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம், டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுகவின் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனி செல்வி தொடர்ந்த வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டி கல்லுப்பட்டி … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் <!– உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்கள் படிப்ப… –>

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியிருக்கும் நிலையில், இந்த மாணவர்கள் உக்ரைனுக்கு திரும்புவதும், படிப்பை மீண்டும் தொடருவதும் நடைமுறையில் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

மேகேதாட்டு அணை விவகாரம்: திருச்சியில் மார்ச் 14-ல் தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக சார்பில் வரும் மார்ச் 14-ம் தேதி திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் … Read more

ஆந்திர எல்லையில் கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்: அச்சத்தில் பொதுமக்கள்

பள்ளிப்பட்டு அருகே மூன்று காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. வனத்துறை மற்றும் காவல்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஈச்சம்பாடி என்ற தமிழக எல்லையின் அருகில்ஆந்திர மாநில வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள் நேற்று மாலை முதல் முகாமிட்டு கரும்புத் தோட்டங்கள் மற்றும் விவசாய தோட்டங்களை சீரழித்து வருகிறது. இந்த காட்டு யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

#Breaking || ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை.! 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நட்டு தலைவர்களும் தொலைபேசி மூலமாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடியிடம் விளக்கமளித்துள்ளார். உக்ரைன் நிலவரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் … Read more