ஹிஜாப் விவகாரம் : நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு.! 

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ – மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சார்ந்த மாணவ … Read more

மதுரை மாவட்டம் சாளக்கிபட்டி கருங்குளத்து கண்மாயில் மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாளக்கிபட்டி கருங்குளத்து கண்மாய் மற்றும் சருகுவலையபட்டி நைனான் கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்பிடித்து மகிழ்ந்தனர். நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட … Read more

பஞ்சாப் போல இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பஞ்சாப்பை போல இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கிஅயில், “பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பக்வந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் இன்றைய தலையாயத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதை வழங்க பஞ்சாப் அரசு முடிவு … Read more

ஆற்றில் கவிழ்ந்த சரக்கு வாகனம் – ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு சரக்கு ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு சரக்கு ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் வெண்ணாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலத்தில் இருந்து நிலை தடுமாறி தலைகுப்புற வெண்ணாற்றில் விழுந்தது. இதில் ஈச்சர் வாகனத்தில் வந்த ஓட்டுனர் மொய்தீன் கான், அசோகன், கருப்பசாமி, நிசார் அகமது, சக்தி ஆகியோர் காயத்துடன் … Read more

IETAMIL Special Story: உக்ரைனில் மீட்டாச்சு… போர் இல்லாத பிலிப்பைன்சில் மாணவர்களை எட்டி உதைக்கலாமா?

த . வளவன் போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைனில்  நிலைமை  நாளுக்கு நாள்  உக்கிரமாகி  வருகிறது.  இதனால்  அங்கு மருத்துவம் படித்து வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள்  அரசின் முயற்சியால்  “ஆபரேஷன் கங்கா”  திட்ட வாயிலாக  இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனால்  அவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துள்ளது. உக்ரைனில், ரஷ்யப் படையெடுப்பால்  இந்த நிலை ஏற்பட்டது. ஆனால்  பிலிப்பைன்சில்  எந்தப் போரும் இல்லை. ஆனால் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்வியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் இந்தியாவில்  மருத்துவக் கல்வியை … Read more

#எச்சரிக்கை || உங்கள் செல்போனுக்கு வரும் அந்த அழைப்பை நம்ப வேண்டாம் – பொது மக்களுக்கு எஸ்பி ஸ்ரீ அபிநவ் எச்சரிக்கை.!

அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று, சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மற்றும் நம்பகமற்ற ஆன்-லைன் அப்ளிகேஷன்களின் லிங்க், கடன் அளிப்பதாக வரும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.  மேலும், அறிமுகம் இல்லாதவர்கள் மற்றும் நிறுவனங்கள், வாட்ஸ்அப், முகநூலில் உங்கள் வங்கிக் கணக்கு … Read more

நம்ம ஊரு திருவிழா – முதலமைச்சர் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் மார்ச் 21 அன்று மாலை நடைபெறும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தீவுத்திடலில் திங்கள் மாலை 6 மணி முதல் அருந்தமிழ்க் கலைகளின் விழா நடைபெற உள்ளது. இதைக் கண்டுகளிக்க அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாகக் கலை பண்பாட்டுத் துறை ஒருங்கிணைக்கும் … Read more

கணவரின் சமாதியில் கண்கலங்கிய வி.கே.சசிகலா

தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் தோழி வி. கே. சசிகலா தஞ்சாவூரில் உள்ள தனது கணவரின் நினைவிடத்துக்கு இன்று காலை (20 ம் தேதி) சென்று மாலை அணிவித்து கண் கலங்கினார். புதிய பார்வை இதழின் முன்னாள் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராசனின் 4-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் விளார் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்கள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவு நாளில் பங்கேற்பதற்காக கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு … Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுனர் தற்கொலைக்கான காரணம் என்ன? செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (38). இவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரிக்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் பணி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் பேசுவதற்காக கற்பகம்பாள் கல்யாண மண்டபத்திற்குச் செல்வது வழக்கம். நேற்று இரவும் பணி முடித்து விட்டு அந்த மண்டபத்திற்குச் சென்றுள்ளார். … Read more

குமரி அனந்தன் சுயசரிதை எழுத வேண்டும்: பிறந்தநாள் விழாவில் ப.சிதம்பரம் கோரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் முன்னிலையில், நேற்று காலை 10 மணியளவில் சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சு.திருநாவுக்கரசு, எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் ஏ. செல்லகுமார், … Read more