"2014-ல்தான் சுதந்திரம் கிடைத்தது என்று கூட மோடி கூறுவார்" – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

இந்தியாவுக்கு 2014-க்கு பிறகு தான் சுதந்திரம் கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி மனித நேயத்திருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய … Read more

Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா

Go to Live Updates Tamil Nadu News Updates: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் மார்ச் 18 ஆம் தேதி வரை சுமார் 847 பேர் உயிரிழந்துள்ளனர்.1399 பேர் காயமடைந்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈசிஆரில் மது விருந்து – 500 பேரிடம் விசாரணை சென்னை கிழக்கு கடற்கரை சாலை தனியார் விடுதியில் சட்டவிரோதமாக மது விருந்து நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சோதனையில் போதைப் பொருட்களும் … Read more

நாடொறும் நாடு கெடும் – வள்ளுவன் வாக்கை மேற்கோள் காட்டிய சசிகலா.! தமிழக பட்ஜெட்-க்கு காட்டமான விமர்சனம்.!

வி.கே.சசிகலா இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் விவசாயம், எந்த வகையில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பது கேள்விக்குறியானது. தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பயிர் விதைகளை தமிழக அரசே அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது, இடுபொருட்கள் மற்றும் உர விலைகளை குறைப்பது போன்ற எந்த அறிவிப்பும் இந்த தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது விவசாயிகளுக்கு மிகவும் ஏமாற்றத்தை … Read more

ராமஜெயம் கொலை சிறை கைதிகளிடம் துப்பு துலக்கும் போலீஸ்..! 5 தனிப்படை பர பர!

பத்து வருடங்களுக்கு முன்பு  நடந்த, திருச்சி  ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சிறைக்கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ந்தேதி நடைபயிற்சிக்குச் சென்ற போது மர்மக் கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் கைகால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையில் … Read more

பள்ளி பாடப் புத்தகங்கள் விற்க 276 கடைகளுக்கு அனுமதி: தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதிலும் 276 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 1-12 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புத்தகங்கள் விற்பனையை இதுவரை பாடநூல் கழகமே நேரடியாக செய்து வந்தது. இந்நிலையில், புதிய முயற்சியாக சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்களை … Read more

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்று பயனடைந்த வேளாண் கண்காட்சி

கிருஷ்ணகிரி அருகே ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் வேளாண் கண்காட்சியில்  ஏராளமான மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாலாறு வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டபடிப்பு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி நடத்தினர். கல்லூரியின் உதவி பேராசிரியர் வைத்தீஷ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக வேளாண்மை உதவி இயக்குனர் பிரியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். … Read more

சிறு துண்டு மஞ்சள் இரவில் ஊறவைத்து… சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு!

உலகளில் பெரும்பாலான மக்கள் தற்போது சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரழிவு நோய் ஏற்படுகிறது. உலக நீரழிவு சம்மேளனத்தில் அறிக்கை படி, உலகளவில் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நோயை கட்டுப்படுத்த முறையான மருந்துகள் அறிவுறுத்தப்பட்டாலும், உணவு பொருட்களில் சில அடிப்படை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நிலை என்பதால், ஒருவர் தனது உணவை சரியாகக் … Read more

இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து.. பரிதாபமாக பலியான தம்பதியினர்…!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சீம்பால் கோட்டையை சேர்ந்தவர் தசரதன். இவரது மனைவி அமுதா. இவர்கள் வெட்டுக்காடு பகுதியில் உள்ள தோப்புகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தசரதன் தனது மனைவியுடன் விட்டு பகுதியிலிருந்து லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது … Read more