தமிழக செய்திகள்
ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண்குழந்தை… காதல் பரிசு கசந்த சோகம்..! தாயிடம் சேர்த்த போலீஸ்
சேலம் அருகே தண்டவாளத்தில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை, போலீசார் தாயிடம் சேர்த்துள்ளனர். மும்பையில் மலர்ந்த காதலுக்கு கிடைத்த பரிசு தண்டவாளத்தில் வீசப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரமச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளம் அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண்குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையின் அழு குரல் கேட்டு அந்த வழியாக சென்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த … Read more
தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகை அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் அதிருப்தி
நிதிநிலை அறிக்கையில் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தமிழக தலைவர் கே.வி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் பொது நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 2-வது முறையாக வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் … Read more
“தமிழக அரசு முதன்முறையாக உண்மையை சொல்லி இருக்கிறது” – அண்ணாமலை
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கிறது என முதன் முதலாக தமிழக அரசு உண்மையைச் சொல்லி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை மேலூரில் தங்கள் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகச் அங்கு சென்றிருந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். Source link
தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதன் நோக்கமே இன்னும் நிறைவேறவில்லை: அன்புமணி அடுக்கும் காரணங்கள்
சென்னை: சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை” என்று அவர் விமர்சித்துள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க … Read more
விவசாய நிலங்களில் இடுபொருட்களை தெளிக்க ட்ரோன்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் – தமிழக அரசு
விவசாய நிலங்களில் இடுபொருட்களை தெளிக்க ட்ரோன்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்து குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் … Read more
இயற்கை வேளாண்மை முதல் டிஜிட்டல் விவசாயம் வரை: தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 சிறப்பு அம்சங்கள்
சென்னை: 2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டில் மொத்த நிதி ஒதுக்கீடு – ரூ.33,007.68 கோடி. சென்ற 2021-22-ஆம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு – ரூ.32,775.78 கோடி ஆகும். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்: > கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் … Read more
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த சிசிடிவி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் பைக் திருட்டு சம்பவம் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 10க்கும் மேற்பட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஒரே நபர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனிடையே இரு தினங்களுக்கு முன் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த … Read more
மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம்… திமுக அரசின் ’மவுனம்’ ஏன்? – எடப்பாடி பழனிசாமி
சென்னை: மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் 18.3.2022 அன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், உடனடியாக காவிரி ஆற்றின் குறுக்கே … Read more