தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப்போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23 வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் – என்றார் வள்ளுவப் பெருந்தகை. … Read more