18 ஆண்டு பவுலர் வாழ்க்கை… ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய சாம்பியன் யார் தெரியுமா?

Cricket news in tamil: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பிரபலமானவர்கள் பந்துவீச்சாளர்கள். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் இவர்கள், பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பது முதல் அவர்களை ரன்கள் அடிக்காமல் தடுப்பது, சரியான நேரத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது வரை அவர்களின் கடமை நீளுகிறது. மேலும், வைடு, நோ-பால் என வீசி ரன்களை வாரிக்கொடுக்காமல் இருப்பதும் அவர்களின் தலையாய கடமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், வைடு, நோ-பால்களை வீசாமல் தொடர்ந்து பந்துகளை வீசுவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கே வெறுப்பாக இருக்கும். இதனால், … Read more

மகன் குடும்பத்தையே கொலை செய்த தந்தை.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

மகன் குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தொடுபுழா, சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீத் . இவரது மகன் அப்துல் பைசல் . இவருக்கு திருமணமாகி ஷீபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அப்துல் பைசலுக்கும், அவரது தந்தை ஹமீதுக்கும் இடையில் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடீரென அலறினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். … Read more

அரசு பள்ளியில் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு மரங்களை அடியோடு வெட்டிய உதவி ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சிக்கு உட்பட அரசு பள்ளியில், 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு மரங்களை அடியோடு வெட்டி விற்பனை செய்ய முயன்ற பள்ளி உதவி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 21 தேக்கு மரங்கள் மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான்று, கூலி ஆட்களை வைத்து … Read more

மார்ச் 19: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.18 வரை மார்ச்.19 மார்ச்.18 … Read more

சாலை விபத்தில் தம்பதியருக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியர் உயிரிழந்தனர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் தசரதன் (65) அமுதா (58) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டிக்காடு, காஞ்சிமடத்துறை ஆகிய பகுதியில் உள்ள தோப்புகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தசரதன் இன்று தனது … Read more

பெரியார் மண்ணில் இந்த படத்திற்கு அனுமதி இல்லையா? பெண் இயக்குனர் கண்ணீர்

Some people prevent to release movie, Kallan movie director Chandra emotional speech: கரு பழனியப்பன் நடிப்பில் வெளியாகியுள்ள கள்ளன் படத்தை, குறிப்பிட்ட சமூகத்தினர் திரையிட விடாமல் தடுக்கிறார்கள் என அந்த படத்தின் இயக்குனர் சந்திரா கண்ணீருடன் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நடித்துள்ள திரைப்படம் கள்ளன். இந்தப் படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். தற்போது இந்த படம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. காரணம் இப்படத்தின் பெயர். இந்த படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சமூகத்தை … Read more

தமிழக அரசு பட்ஜெட்டின் அந்த ஒரு  அறிவிப்பும்., பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையும்.! Dr அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்; புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ள நிலையில், … Read more

மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஆயில் கசிவு.? – வாந்தி, மயக்கம்….

மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கலந்து வருவதால் 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுக்குப்போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குத்தாலம்,சேத்திரபாலபுரம் பிரதான சாலையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒருங்கிணைந்த சேமிப்பு நிலையம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளில் எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் வழியாக இங்கு ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு நிலையத்துக்கு எதிரேயுள்ள ராமாமிர்தம் தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக இங்கு குடிநீர் … Read more

மார்ச் 19: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more