கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு? – வெங்கையா நாயுடு

Naidu calls for rejecting Macaulay’s education, asks what is wrong with saffron: கல்வியை காவிமயமாக்குவதாக அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் “காவி நிறத்தில் என்ன தவறு” என்று சனிக்கிழமையன்று துணை ஜனாதிபதி எம் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டிலிருந்து மெக்காலே கல்வி முறையை முற்றிலுமாக நிராகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தியர்கள் தங்கள் “காலனித்துவ மனநிலையை” கைவிட்டு, தங்கள் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவ் … Read more

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : சசிகலா, எடப்பாடி கே பழனிச்சாமியை இணைக்கக் கோரிய வழக்கு., சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணை  நடந்து வருவதால், சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்டோரை இணைக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட தீபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும் நிலையில், நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி தீபு கூடுதல் மனு ஒன்றினை … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த இலச்சினை அனுப்புவோருக்கு பரிசு – தமிழக அரசு

சென்னையில் நடக்க உள்ள உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த இலச்சினை, மஸ்காட் எனப்படும் சின்னம், வாசகம் ஆகியவற்றை உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்போட்டிகளில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்த செஸ் … Read more

தமிழக முதல்வரின் சாதனைக்கு முத்தரையர் சமூகத்தினர் துணை நிற்கின்றனர் – உதயநிதி பெருமிதம்

மதுரை: இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதற்கு முத்தரையர் சமுதாயத்தினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து துணை நிற்கின்றனர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார். மதுரை ஆனையூரில் இன்று (சனிக்கிழமை) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிகேணி எம்எல்ஏவுமான உதயநிதி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சிலையை திறக்க வந்த எனக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்துள்ளீர்கள். தமிழக வரலாற்றில் புகழ்மிக்க … Read more

சங்கராபுரம்: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் குழந்தை உயிரிழந்ததா? – போலீசார் விசாரணை

சங்கராபுரம் அருகே வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை குடித்து மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் பாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய தாய் லட்சுமியும் மகள் ரச்சனா லட்சுமியும் தனது வீட்டிற்கு எதிரே கிடந்த குளிர்பானத்தை எடுத்து வந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடித்துள்ளனர். இதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு … Read more

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் – மோடி

Japan to invest USD 42 billion in India over next five years, says PM Modi: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்ததைத் தொடர்ந்து, ஜப்பான் இந்தியாவில் ஐந்து டிரில்லியன் யென் (42 பில்லியன் டாலர்) முதலீட்டு இலக்கை நிர்ணயித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார். #WATCH Japan will invest … Read more

கோடை காலம் தொடங்கியாச்சு – பொதுமக்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட உணவு பாதுகாப்பு துறை.!

காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை மற்றும் தரமற்ற உணவு பொருள்கள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண், ஜி மெயில் முகவரிகளை உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.  அதனடிப்படையில், … Read more

சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் திடீரென குளத்துக்குள் பாய்ந்த கார்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கார் ஒன்று குளத்துக்குள் பாய்ந்த நிலையில், காரிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் மாருதி ஸ்விப்ட் காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை கிருஷ்ணமூர்த்தியே ஓட்டிச் சென்றுள்ளார். கருங்குளம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரம் உள்ள குளத்துக்குள் பாய்ந்தது. குளம் முழுவதும் நிரம்பி … Read more

தமிழகத்தில் இன்று 58 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 24 பேர்: 118 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,334. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,639. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

முட்புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை! மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிக்கிய தாய்

சேலம் அருகே ஓடும் ரயிலில் பிறந்த ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற தாயை ஓமலூர் போலீசார் கண்டுபிடித்து தாயிடமே குழந்தையை ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரயில்வே தண்டவாள ஓரத்தில் ஆழகான ஆண் குழந்தைக் கிடந்தது. இந்த குழந்தையை மீட்ட ஓமலூர் போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். குழந்தையை ஓமலூர் அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். இந்தநிலையில், குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து ஓமலூர் … Read more