சசிகலாவுடன் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா சந்திப்பு

OPS Brother Meet V K Sasikala IN Tiruchandur : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கட்சியில் சசிகலாவுக்கு உண்டான ஆதரவு பெருகி வரும் நிலையில், திருச்செந்தூரில் இன்று ஒபிஎஸ் தம்பி ஒ ராஜா சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா இறந்ததில் இருந்து அதிமுகவில், ஒபிஎஸ் இபிஎஸ் ஒரு அணியிலும் சசிகலா தனி அணியிலும், இருந்து வரும் நிலையில், இவர்களுக்குள் வெளிப்படையான மோதல் இருந்து வருகிறது. மேலும் அதிமுகவின் … Read more

நாளையுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக காட்சி.!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வரும் சென்னை புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. 45 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 நாட்கள் இந்த புத்தக காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து பபாசி எனப்படும் … Read more

விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன மூன்று கோபுர கலசங்கள் கண்டுபிடிப்பு <!– விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன மூன்று … –>

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் திருடப்பட்ட கோவில் கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன. விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்நடந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் கோவிலிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று கோபுரக்கலசங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவத்தன்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  இதில் பெரியார் நகர், அமுதம் தெருவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோபுர கலசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு … Read more

சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்கள் பதவியேற்றனர்: சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மேயர்,துணை மேயர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், கடந்த 2-ம் தேதி அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சிகளில்மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்,துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. … Read more

கூட்டணி அறம் காத்துள்ளார் முதல்வர் – திருமாவளவன்

கூட்டணி அறத்தை காக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை திமுக ஏற்றதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப்பொறுப்புக்கான தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் இருந்ததாக திருமாவளவன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். சில இடங்களில் நடந்த அத்துமீறல்களுக்கு திமுக தலைமை காரணமில்லை என்றபோதும் அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்வர் ஆற்றியுள்ள எதிர்வினை … Read more

Rasi Palan 05th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 05th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 05th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 05ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

திடீர் திருப்பம்.. திமுக நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா.!!

நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் கூட்டணி கட்சியினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு … Read more

மறைமுகத் தேர்தலில் அரங்கேறிய களேபரங்கள்.! <!– மறைமுகத் தேர்தலில் அரங்கேறிய களேபரங்கள்.! –>

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பல இடங்களில் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாலை மறியல், வாக்குவாதம், தள்ளுமுள்ளு உள்ளிட்ட நிகழ்வுகளும் அரங்கேறின… மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் பதவிக்கு செல்வி என்பவரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறைமுகத் தேர்தலில் சகுந்தலா 17 வாக்குகள் … Read more

ரூ.564 கோடி மோசடி; பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: ரூ.564 கோடி மோசடி செய்த தாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகி அகமது ஏ.ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட … Read more