தமிழகம் முழுவதும் சோதனை – 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பது கண்டுபிடிப்பு

பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும்பொழுது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்திய உணவுப் பாதுகாப்புத்துறை, அது குறித்து புகாரளிக்க வாட்ஸ் எண்ணை அறிவித்துள்ளது. பொதுமக்கள் கோடை காலங்களில் அதிகளவில் பருகும் குளிர்பானங்களின் தரம் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் மாநில முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டதாகவும் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்பான பாட்டிலில் காலாவதி நாள் உள்ளிட்ட … Read more

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று … Read more

சீர்காழி: கடலில் விடப்பட்ட 4,000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள்

சீர்காழி அருகே கூழையார் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள், கூழையார் கிராமத்தில் உள்ள பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொறிப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளில் இருந்து அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. இதையடுத்து, அவற்றை பத்திரமாக கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. … Read more

மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு… விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்

Tamilnadu Agri Budget Highlight Update : தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்காக பட்ஜெட் தொடர் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து விளக்கம் அளித்திருந்த நிலையில், பட்ஜெட் கூட்த்தொடரின் 2-வது நாளான இன்று வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடகா ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்தில் வேளான்துறைக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் … Read more

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை – பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

தமிழகத்தில் நரிக்குறவர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்” சமூகத்தினரை, தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய … Read more

குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரிப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,அந்த சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்துக்கு இந்தியத் தலைமைப் பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். லோகூர் குழுவும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் இந்தச் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகப் பல கோரிக்கைகள் அளித்திருந்தும் இந்தச் சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நெடுங்காலமாக நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  … Read more

32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம்: புதுவை பொறியியல் மாணவர் சாதனை முயற்சி 

புதுச்சேரி: புதுச்சேரியில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களைக் கொண்டு சிட்டுக்குருவியின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கி பொறியியல் மாணவர் ஒருவர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (18). இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ முதலாமாண்டு படித்து வருகிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், நாளை (மார்ச் 20) உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு … Read more

சிவகங்கை: ஆபத்தை உணராமல் அரசுப்பள்ளி மாணவர்கள் செய்த செயலால் பொதுமக்கள் அச்சம்

தேவகோட்டையில் பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு படிப்பதற்காக ஓரியூர், மங்களக்குடி, ஊரணி கோட்டை, அனுமந்தகுடி பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் தேவகோட்டைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பள்ளி நேரத்திற்கு ஒரேயொரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் இடமின்றி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையில் மீது ஏறி பயணம் செய்து வருகின்றனர். மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை … Read more

Tamil News Today LIVE: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பாராட்டு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 135-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெறும் என … Read more

தமிழக பட்ஜெட் : தமிழக மக்களை ஏமாற்றும் செயல் – விஜயகாந்த்.!

தமிழக சட்டசபை (2022-2023) பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இன்று இரண்டாவது நாள்  2022-2023-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது இந்நிலையில், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் அந்த செய்தியில், “பல லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கியுள்ள நிலையில், … Read more