தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசான/மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 21.03.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 22.03.2022 முதல் 23.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை: 19.03.2022, 20.03.2022; தமிழகத்தில் ஓரிரு இடங்களில் … Read more

விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனைமரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல் மற்றும் அதற்கான உபகரணங்கள் ஆகியவை 75% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் என்றும் சிறந்த பனை ஏறும் எந்திர கண்டுபிடிப்புக்கு விருது வழங்கப்படும் … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: நீடித்த நிலையான பருத்தி இயக்கத்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம், 15 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் … Read more

வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிய செயலி – என்ன ஸ்பெஷல்?

வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள செயலி உருவாக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதை முதல் விளைச்சல் வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் உழவன் செயலி மூலம் அறிந்துகொள்ள முடியும் என்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் தெரிவிப்பதால் அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் வாரியாக பயிர்த்திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக் குறீயீடு வழங்கப்படும் என்றும் தமிழகத்தின் ஏழு வேளாண் … Read more

கறை நீங்க, ஃபிரிட்ஜ் நாற்றம் போக, நெயில் பாலிஷ் அழிக்க.. எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!

நம் அனைவரின் வீட்டிலும் எலுமிச்சை பழம் உள்ளது, நம்மில் பெரும்பாலோர் அதை சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் பலருக்கும் எலுமிச்சையின் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. உங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவும் சில எலுமிச்சை ஹேக்ஸ் இங்கே உள்ளன. படிக்கவும். கறை நீங்க! * உங்களுக்கு பிடித்த துணியில், கடினமான கறை பட்டுவிட்டதா? எலுமிச்சை உங்களுக்கு உதவும். துணியில், கறை பட்ட இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். சில மணி நேரம் … Read more

தமிழக பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த அறிவிப்பாக உள்ளது.. விஜயகாந்த கருத்து.!!

2022 – 23 தமிழக பட்ஜெட் – வெறும் அறிவிப்பு ஆட்சியாக இல்லாமல், அதனை நிறைவேற்றும் ஆட்சியாக இருந்தால் வரவேற்கதக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய … Read more

புகாரளித்த மாற்றுத்திறனாளியை தாக்கிய விவகாரம் – விராலிமலை காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவது குறித்து புகாரளித்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய விவகாரத்தில் விராலிமலை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விராலிமலை காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். Source link

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2 சிறப்பு மண்டலங்கள்

சென்னை: சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு “சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்” உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் … Read more

பாக்ஸிங்கில் தங்கம்… சின்னத்திரையில் நடிப்பு… ஆல்ரவுண்டராக கலக்கும் சீரியல் நடிகை

Tamil Serial Actress Iraa Agarwal Update In tamil : தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியல்கள் மக்கள் மத்தியில் சிறந்த பொழுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் திரைப்பட நடிகர்கள் பலரும் தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து வரும் நிலையில். இந்த நடிகர்களை வைத்து அவ்வப்போது புதிய சீரியல்களையும் களமிறக்கி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐரா அகர்வால். சென்னையை சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற … Read more

வேளாண் கூலி தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்..!

வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த  நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர் செல்வம் வாசுத்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ஓதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் எனவும் வேளாண்துறையில் … Read more