கூனிக் குறுகி நிற்கிறேன்… கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுகவினர் வெற்றி பெற்றதால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்தகைய செயலால், கூனிக் குறுகி நிற்கிறேன் என்று கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட், ஜார்கண்ட் அணிக்கு எதிராக தமிழக அணி சிறப்பான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 38 அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழக அணி டெல்லி மற்றும் சத்தீஷ்கர் அணிக்கு எதிரான ஆட்டங்களை டிரா செய்திருந்த நிலையில், தனது 3-வது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியுடன் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் தமிழக … Read more

காவல் ஆணையம் திருத்தம் செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு <!– காவல் ஆணையம் திருத்தம் செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அ… –>

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய உயர்நீதிமன்றம், திருத்தம் செய்வது குறித்து ஒருவாரத்தில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. லாக் அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகாரளிக்க காவல் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி தமிழகத்தில் காவல்துறையினருக்கு எதிராக மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்.பி மற்றும் ஏ.எஸ்பி. ஆகியோர் … Read more

தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் சசிகலா: ஓபிஎஸ் சகோதரர் உடன் சந்திப்பு

தூத்துக்குடி: தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசினார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வி.கே.சசிகலா இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் சசிகலா, தனது ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் … Read more

பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை … Read more

சசிகலா தலைமை ஏற்க ஓ.பி.எஸ் தயார்? திடீர் மாற்றம் பின்னணி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வியைத் தொடர்ந்து, சசிகலா, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்களை மீண்டும் தொடங்கியுள்ளது. அண்மையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் உள்ள அவருடைய இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என … Read more

#BigBreaking || திருடு போன விருத்தாசலம் விருத்தாம்பிகை சன்னதி கோபுரத்தின் 3 கலசங்கள் பெரியார் நகரில் கண்டுபிடிப்பு.! ஒருவர் கைது.!

கடலூர் மாவட்டம்,  விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன.  சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 100 கிராம் என 300 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது.  கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் திருடு போனது தெரியவந்தது. … Read more

உக்ரைனில் இருந்து மேலும் 132 தமிழக மாணவர்கள் சென்னை வருகை.! <!– உக்ரைனில் இருந்து மேலும் 132 தமிழக மாணவர்கள் சென்னை வருகை.! –>

உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 132 மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 261 மாணவர்கள் ஏற்கனவே தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில், 5வது நாளாக தற்போது சென்னை, கன்னியாகுமரி,மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 132 மாணவ மாணவிகள் வந்தனர். சென்னை வந்த மாணவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் … Read more

'தி மயிலாப்பூர் கிளப்'-புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, ‘தி மயிலாப்பூர் கிளப்’புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை ‘தி மயிலாப்பூர் கிளப்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் … Read more

அதிமுகவில் திருப்பம்? – சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மிக பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்திருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு ஆலோசனைக் கூட்டமோ, கட்சி சார்ந்த அலுவல் கூட்டமோ இல்லை என அறிவித்திருந்தார். ஆனால், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்த சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பு குறித்து … Read more