ஷாக்… சென்னை ஐ.ஐ.டி-யில் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு மான் பலி; மனிதர்களுக்கு பரவுமா?

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த 2 நாட்களில் 4 மான்கள் இறந்ததாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருந்தது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு, ஐ.ஐ.டி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த 2 நாட்களில் 4 மான்கள் இறந்ததாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மான்கள் இறந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு … Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது.. கூட்டுறவுத் துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. … Read more

மின்சாரம் தாக்கிய சிறுவனின் மேல் சிகிச்சைக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.!

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மின்சாரம் தாக்கிய சிறுவனின் மேல் சிகிச்சைக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒதுக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் பெற்றோரிடம்  மாவட்ட ஆட்சியர் வழங்கினார். செல்வகுமார், ஜெயா தம்பதியின் 8வயது மகன் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தான்.சிறுவனின் மேல் சிகிச்சை  உதவுமாறு பெற்றோர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தனர். இந்நிலையில் சிறுவனின் மேல் சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. … Read more

மின் உற்பத்தி கழகத்தின் இழப்பு முழுவதையும் அரசே ஏற்கும்: தமிழக பட்ஜெட்டில் தகவல்

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்க, ரூ.13,108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.19,297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இதுவரை 75,825 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகளும் இந்த நிதியாண்டுக்குள் வழங்கப்படும். மின்னக மையத்தின் மூலம், … Read more

பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளிவைப்பு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என 2018 ல் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு ஜூலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக பொன் மாணிக்கவேலை நியமித்து, அவருக்கு தேவையான காவலர்கள், உட்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், … Read more

இட்லி சூடு ஆறிய பிறகும் அதே சாஃப்ட்… இந்த 3 விஷயங்களை கவனத்தில் வையுங்க!

தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது. கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு … Read more

இ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.!!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. … Read more

தமிழகத்தின் 2-வது வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல்.!

தமிழகத்தின் 2-வது வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்ட சபையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, விதை மானியம், பாசனக் வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கீடு, காவிரி – குண்டாறு இணைப்புக்கு கூடுதல் நிதி உதவி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க சலுகைகள் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் … Read more