தமிழக செய்திகள்
Russia Ukraine Crisis Live: ஐரோப்பிய யூனியனில் இணைய மேலும் 2 நாடுகள் விருப்பம்? ரஷ்யா அதிர்ச்சி!
Go to Live Updates Ukraine News: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது’ ரஷ்ய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தாக்குவதால் அபாயம் நிலவுகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல்! உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய … Read more
உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4864 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38912-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more
மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு! <!– மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு! –>
சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார் பிரியா சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுகவின் பிரியா தேர்வு எவ்வித போட்டியும் இன்றி, சென்னை மேயராக தேர்வானார் திமுகவின் பிரியா கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தல் கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக கல்பனா போட்டியின்றி தேர்வு திமுக கூட்டணி 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்டிபிஐ ஒரு இடத்திலும் … Read more
புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் திமுக, அதிமுக போராட்டம்: போலீஸ் தடியடியால் பதற்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மறைமுக தேர்தலைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) திமுக, அதிமுக போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால் தடியடி நடந்தது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். … Read more
ஓ.பி.எஸ். தலைமையிலான `செயல்வீரர்கள் கூட்டம்’ ரத்து! சசிகலா – தினகரன் விவகாரம் காரணமா?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடைபெறவிருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் ரத்தாகியுள்ளது. முன்னதாக சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித் தனியாக நேற்று ஆலோசனை நடத்தியிருந்தனர். ஏற்கெனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சியில் குரல் எழுப்பப்பட்டு வந்தது. உதாரணத்துக்கு கோவையில் செய்தியாளர்களை நேற்று … Read more
கோவில்களுக்கு முறையான ஆடைகள் அணிந்து வரவேண்டும்: சென்னை ஐகோர்ட்
Tamilnadu News Update : தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான விளம்பர வைப்பது தொடர்பாக பொது உத்தவை பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கோவில்களுக்கு வரும் மாற்று மதத்தினர் முறையாக ஆடை அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு கோவிலின் புனிதத்தை … Read more
தமிழகத்தில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலோர தமிழகம் … Read more
ரூ.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி <!– ரூ.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு… –>
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகாரில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்ததாக மகேஷ் எனபவர் தொடர்ந்த மனுவில், ஜாமீன் தரக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை காணொலி மூலம் செங்கல்பட்டு முதன்மை நீதிமன்ற நீதிபதி விசாரித்தார். ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வெளியே … Read more