ஊத்தங்கரை: மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

ஊத்தங்கரை அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளியிலுள்ள 115 மாணவர்களில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 100 பேரில் ஏழு மாணவர்கள் மட்டும் திடீரென்று லேசான … Read more

அதி மேதாவி… ஆர்வக் கோளாறு… அரை வேக்காடு… அண்ணாமலையை காய்ச்சிய செந்தில் பாலாஜி!

Tamilnadu News Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு வருகின்றனர். தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலை அரு அரைவேக்காடு என்று செந்தில்பாலாஜி விமர்சித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. … Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி.. அதிரடி காட்டிய போலீசார்.!

மதுரவாயில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் உதவி எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். இதுகுறித்து அந்த பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த வளசரவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை … Read more

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகரம் பகுதியைச் சேர்ந்த தேசிங்கு என்ற அந்த நபர், கடந்த 2019ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேசிங்குவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து … Read more

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை: திருப்பூர் தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் குன்னத்தூர் அருகே பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பிற்கு பிறகும், மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பிரசவம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்னத்தூர், செங்கப்பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இன்றி பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவைசிகிச்சை, கருக்கலைப்பு, பேறுகால பின் கவனிப்பு ஆகியவை நடைபெறுவது தெரிய வந்தது. … Read more

"இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை" – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்றாலும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என நிதியமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கும் சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் … Read more

திடீர் திருப்பம்… சோனியாவை சந்தித்த குலாம் நபி ஆசாத்; காங்கிரஸில் மாற்றம் வருமா?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவைச் சந்தித்தார். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜி-23 தலைவர் ஒருவருடன் ராகுல் காந்தியின் முதல் சந்திப்பு இது. காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் சிலர் சந்தித்து, அனைத்து மட்டங்களிலும் கூட்டு மற்றும் உள்ளடக்கிய தலைமை மற்றும் முடிவெடுப்பதற்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்ட 2 நாட்களுக்குப் பிறகு, திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் … Read more

தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி.. கணவன் செய்த விபரீத செயல்..!

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவன் ரயிலில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். மெக்கானிக்கான இவர் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல்கள் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த துக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தலை … Read more

கஞ்சா போதையில் மூதாட்டியையும் அவரது பேரனையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிய ஆசாமிக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா போதையில் 70 வயது மூதாட்டியையும் அவரது 5 வயது பேரனையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பட்டுநூல் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்று கூறப்படும் நிலையில் தினசரி போதையில் அப்பகுதியினரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கஞ்சா போதையில் இருந்த யுவராஜ், பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்த … Read more

மார்ச் 18: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.17 வரை மார்ச்.18 மார்ச்.17 … Read more