இன்றைய தொழில்நுட்பத்தால் முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது – நீதிமன்றம்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது என்பதை கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளாறை கோவிலும் சேதப்படுத்தப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு … Read more

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ! பிக்பாஸ் லாஸ்லியா கியூட் லுக்ஸ்!

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். நிகழ்ச்சியின் போது, ​​லாஸ்லியாவுக்கும் இணை போட்டியாளரான கவினுக்கும் இடையே அற்புதமான கெமிஸ்ட்ரி இருந்தது, இதற்காக … Read more

கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை.. இளம்பெண்ணிடம் விசாரணை..!

பிறந்து சில மணி நேரங்களே ஆன குழபந்தையை கால்வாயில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், மேல அங்கம் கிராமத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளம்பெண் ஒருவர் … Read more

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ”மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்” என மாற்றம்

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித்தொகை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் முருகானந்தம் இதனை தெரிவித்தார்.   Source link

தமிழக பட்ஜெட் 2022-23 |  ”முஸ்லிம் மாணவிகளுக்கும் தனித் திட்டம் அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்” – ஜவாஹிருல்லா

சென்னை: தமிழக பட்ஜெட்டை வெகுவாக பாராட்டியுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ”முஸ்லிம் மாணவிகளுக்கும் தனித் திட்டம் ஒன்றை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக பட்ஜெட் 2022-23 குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழக அரசின் நிதி மேலாண்மை மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து … Read more

”மகளிருக்கு உரிமைத்தொகை இல்லை! பட்ஜெட் ஏமாற்றமே”-விமர்சனங்களை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி

மாநிலத்தின் வருவாய் அதிகரித்தபோதும் கடனின் அளவு குறையவில்லை. கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு படித்தவர்களையும் ஏமாற்றிவிட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 2022-23 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் 1லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது, அவரது ஆட்சிக்கு … Read more

உக்ரைனுக்கு இந்திய மாணவர்கள் செல்வது எப்படி? ஏஜெண்டுகள் நெட்வொர்க் பின்னணி

உக்ரைன் நெருக்கடி, இந்தியாவில் மருத்துவக் கல்வியில் உள்ள ஓட்டைகளை பொதுப்பார்வைக்கு முன்னே கொண்டு வந்தது. அது ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்கிறார்கள் என்ற உண்மையைக் காட்டினாலும், இந்த மாணவர்களில் பெரும்பாலோர் 2 அல்லது 3 ஆம் வகுப்பு நகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது சுவாரஸ்யமானது. அவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வரை உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. 20 வயதான சந்தோஷ் யாதவ் தனது மருத்துவ … Read more

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்! பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள்.!

தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெப்ரவரியில் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 17-ஆம் தேதி வரை12.96  டன் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.19,58,450/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் … Read more

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை – 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குழந்தை விற்பனை தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் – கோமதி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனையடுத்து தங்களது உறவினரான மகேஸ்வரி என்பவர் மூலம் சேலத்தைச் சேர்ந்த அண்ணாமலை – அம்பிகா தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். சில தினங்கள் கடந்த நிலையில், குழந்தையை அரசின் விதிமுறைப்படி முறையாகத் … Read more

தமிழக பட்ஜெட் 2022-23 | "மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகத்தை தெளிவாகக் காட்டும் பட்ஜெட்" – ஓபிஎஸ்

சென்னை: ”தமிழக பட்ஜெட் இலக்கற்றும்‌, எதிர்காலம்‌ குறித்த எந்த தீர்க்கமான பார்வையும்‌ இல்லாமல்‌ இருக்கிறது. மக்கள்‌ நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில்‌ ஏதுமில்லை” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட் 2022-23 குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நிதி மற்றும்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ இன்று தாக்கல்‌ செய்யப்பட்ட 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின்‌ ஆண்டு வரவு … Read more