நீட் தேர்வு ரத்தே உடனடி இலக்கு: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த … Read more

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையும், நாளை அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, … Read more

உக்ரைன் போர்.. ரஷ்யா பயன்படுத்தியதாகக் கூறப்படும் கிளஸ்டர் குண்டுகள் மற்றும் தெர்மோபரிக் ஆயுதங்கள் என்றால் என்ன?

ரஷ்யா நடத்தி வரும் போரில்’ கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக, மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா ஆகியோர் திங்கள்கிழமை (பிப். 28) குற்றம் சாட்டியுள்ளனர். “அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் பயன்படுத்தினார்கள்,” என்று காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறினார். இந்த ஆயுதங்களை ரஷ்யா உண்மையில் பயன்படுத்தியிருந்தால், அது போர்க்குற்றமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் … Read more

பாலியல் தொல்லையால் தற்கொலை முயன்ற மாணவி.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது, அந்த பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் … Read more

ஆடு களவாணிக்கு குண்டாஸ் பஞ்சாயத்தில் எல்லாரும் சூனா பானா ஆகமுடியுமா ? சப் இன்ஸ்பெக்டர் ராஜினாமா..! <!– ஆடு களவாணிக்கு குண்டாஸ் பஞ்சாயத்தில் எல்லாரும் சூனா பானா … –>

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆடு திருடர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் அடைக்காமல் காப்பற்றுவதற்காக 3 லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆடியோ வெளியான நிலையில் , சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காவல் துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்ததாக கூறி எஸ்.ஐ எடுத்த திடீர் முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தவர் கங்கை நாத பாண்டியன். இவர் இன்னோவா கார்களில் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணை நடைபெறும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணையில் மட்டுமே வழக்குகள் விசாரிக் கப்படும் என்றும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார். கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2020 மார்ச் இறுதி வாரத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி விசார ணையாக நடைபெற்றது. அதன்பிறகு கரோனா பரவல் குறைந்ததும் காணொலி மற்றும் … Read more

'அரசுப் பணிகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குக' – உயர்நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்புத் துறை வீரர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு … Read more

ஓம் நமச்சிவாய, ஜெய் பீம், பெரியார்… சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பில் வெடித்த முழக்கங்கள்!

Chennai corporation councilors oath taking ceremony incidents: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, சிங்கார வேலர் வாழ்க, எம்ஜிஆர் பாடல் என பல்வேறு முழுக்கங்களுடன் பதவியேற்றனர். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி ஆணையர்களும், நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் செயல் … Read more