​​நீட் எதிர்ப்பு கர்நாடகாவிலும் எதிரொலி., இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? என்று, தமிலாக் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் … Read more

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு <!– திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டு சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் நீக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் 500 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என்றும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்டுப்பாடுகளை தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் … Read more

தமிழகத்தில் இன்று 320 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 89 பேர்: 946 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 320 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,041. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,07,595. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 84,36,336 பேர் வந்துள்ளனர். சென்னையில் 89 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

சசிகலா, தினகரன் இணைப்பு.. தேனி கூட்டத்தில் நடந்தது என்ன? – மாவட்ட செயலாளர் சையது பேட்டி

சசிகலா மற்றும் தினகரனை ஒருங்கிணைத்து ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணைவீட்டில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன், சசிகலா இணைப்பு குறித்த ஆலோசனைக்கு பின் பேசிய தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், ” உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டோம், அதிமுக தோற்றதற்கு … Read more

இந்திய மாணவர்களுக்கு கடைசி நேர கட்டளை… போர்முனை டாப் 5 நிகழ்வுகள்!

Leave Kharkiv immediately: Indian embassy in Ukraine tells its citizens amid worsening situation: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமை ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது. அதன்படி இந்தியர்கள் அனைவரும் கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்ய தரப்பில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய … Read more

அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்த நிர்வாகிகள் – தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு.! 

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று, தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். கட்சிக்குள் பிளவு உள்ளது தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி … Read more

மார்ச் 7 முதல் உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம் – தலைமை நீதிபதி <!– மார்ச் 7 முதல் உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி விசாரணை ந… –>

சென்னை உயர்நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடத்தப்படுகிறது. காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. எனவே உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் … Read more

'மாணவர்களை கேள்வி கேட்க பாஜகவுக்கு இதுவா நேரம்?' – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை: “உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை … Read more

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பத்ர தீப விழா கொண்டாட்டம்!

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பத்ர தீப விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் முழுவதும் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு விளக்கொளியில் கோவில் ஜொலித்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா கடந்த … Read more

வாவ்… கொரோனாவை ஒழிக்கும் வேப்ப மரச் சாறு: இந்திய ஆய்வு முடிவு அறிவிப்பு

Indian research finds Neem tree based drugs may fight against corona: வேப்பமர பட்டைச் சாறு கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை அழிக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸூக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கொரோனா வைரஸ் பற்றியும், … Read more