#சற்றுமுன் || நடிகர் அஜித்துக்குமார் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் சந்திரா.!

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்ற செய்திக்கு, நடிகர் அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் அளித்துள்ள பேட்டிக்கு, நடிகர்  அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர், ‘நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் … Read more

நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து ரூ.3 லட்சம் திருடிய "மங்கி-கேப்" ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு.! <!– நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள… –>

மன்னார்குடியில், தனியார் வங்கி மற்றும் கோவிலில் இருந்த பாதுகாவலர்களின் கண்ணில் படாமல், அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து 3 லட்ச ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி சாலையில் உள்ள ஆனந்தம் சூப்பர் மார்கெட்டை காலை ஊழியர்கள் திறந்த போது கல்லா பெட்டியில் இருந்த 3 லட்ச ரூபாயும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் திருடு போயிருப்பது தெரியவந்தது. மற்றொரு ஹார்ட் டிஸ்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த … Read more

மார்ச் 01: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது நம் கடமை: சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பேச்சு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் பங்குபெற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். விழா முடிவடைந்தப்பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலில் பங்குபெற்று வெற்றிபெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் உரையாட வருகைபுரிந்தார்.  இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், … Read more

ஹிஜாப் அணிந்து வர கூடாது என கூறிய ஆசிரியை.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!

அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என ஆசிரியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அந்த பகுதியை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் பணிபுரியும் லட்சுமி என்ற ஆசிரியர் மாணவியை ஹிஜாப் அணிந்து வரகூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இது போன்ற … Read more

பிரசவத்தின் போது மருத்துவர்கள் கவனக்குறைவால் மகள் உயிரிழப்பு.. சிகிச்சையில் மகளை இழந்த தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.! <!– பிரசவத்தின் போது மருத்துவர்கள் கவனக்குறைவால் மகள் உயிரிழப… –>

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது மயக்க மருந்து செலுத்தியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், அப்பெண்ணின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2009-ஆம் ஆண்டில்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட  ஷீலா செல்வராணி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்கள் குமரன் மற்றும் முத்துகுமரன் ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் இதனால் தன் மகள் உயிரிழந்ததாகவும் தந்தை ஆபிரகாம் புகார் தெரிவித்தார். இந்நிலையில், இரு மருத்துவர்களிடமும் இருந்து … Read more

"நாங்கள் மீட்கப்பட்டோம்… எங்கள் நண்பர்கள் உள்ள கீவ் நகரில்தான் பேராபத்து!" – உக்ரைன் அனுபவம் பகிர்ந்த தமிழக மாணவர்கள்

உக்ரைனின் மேற்குப் பகுதியிலிருந்து போர் பதற்றத்துக்கு இடையே தமிழகத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் திங்கள்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் உக்ரைனின் ’Uzhorod National Medical University’-ல் படிப்பவர்கள். ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் மூலம் நாடு திரும்பிய இவர்களில் சிலரிடம் பேசினோம். கடந்த சில நாட்களாக தங்களது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களைக் கடந்து வந்ததாக சில மாணவிகள் நம்மோடு பகிர்ந்து கொண்டனர். கீவ் நகர் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதியில்தான் பேராபத்தான போர்ச் … Read more

மின்வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கும் இருளர் இன குழந்தைகள்

ராணிப்பேட்டையில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீட்டில் வைக்கப்படும் சிறு சிறு விளக்குகளை வைத்தும், மெழுகுவர்த்தி வைத்தும் படிக்கும் சூழ்நிலையால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் தங்களுக்கு மின் வசதி சேவையை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், அத்தியானம் கிராமத்தைதில் 20 கும் மேற்பட்ட இருளர் இன சமூகத்தை சேர்ந்த குடும்பங்களில், 60 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு மின் வசதி … Read more

ஜெயக்குமார் ஜாமீன் மனு 3-ம் தேதி விசாரணை: இ.பி.எஸ் – சி.வி சண்முகம் மீது புது வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. இதனிடையே, ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கி … Read more

ஜெயக்குமார் ஜாமின் மனு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு முயற்சி செய்ததாக நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவதை கைது சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுக்களை … Read more