வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து அரவணைத்த குடும்பத்தினர்: ஊரே வியக்க விழா நடத்திய நெகிழ்ச்சி!

கடலூர்: விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவருக்கும் அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறிய அவரை, அழைத்து வந்து அவரது உணர்வுக்கு மதிப்பளித்த குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருநங்கைகள் (ஆணுக்கான அடையாளத்துடன் பிறக்கும் இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை பெண்ணாக உணர்பவர்கள்) பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி, மூத்த திருநங்கைளிடம் தஞ்சமடைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் குடும்ப விபரத்தைக் கூட யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று … Read more

TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறுநியமனத் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் TET தேர்வுக்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டத்தின் போது இரண்டு பெண்கள் மயங்கிவிழுந்தது போராட்டக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

High court order to police to provide security to ADMK councillors: மதுரை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் … Read more

குடும்பத்தினர் கண் முன்னே தந்தை மகனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்..!

குடும்பத்தினர் கண்முன்னே  தந்தை மகன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் நாகூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  அவரும் அவரது மகன் முகம்மது எனும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி … Read more

ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு <!– ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசார… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால், ஜெயக்குமார் மனு வியாழக்கிழமை பட்டியலிடப்படும் – நீதிபதி ஜெகதீஷ் சந்திரா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு Source link

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மணற்சிற்பம் வடித்து நெல்லூர் கலைஞர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மணற்சிற்பம் அமைத்து, நெல்லூர் மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முருகன், … Read more

“வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” – சென்னை கமிஷனர்

அதிக சத்தத்தை எழுப்பும் கருவியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை – ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் … Read more

ஜெயிச்சது தி.மு.க; ஆனால் மேயர் பதவிக்கு முட்டும் பா.ஜ.க: நாகர்கோவில் டென்ஷன்!

த. வளவன் பாஜகவின்  கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இதனால் நாகர்கோவிலின் முதல் மாநகராட்சி மேயர் திமுக மேயர் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற  தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி பாஜக மூத்த தலைவர் எம்ஆர்.காந்தி  வெற்றி பெற்றது அரசியல்  அதிசயமாக பார்க்கப்பட்டது. அதே அரசியல் அதிசயம் மீண்டும் நடக்க நாகர்கோவில் மாநகராட்சியில் வாய்ப்பு இருப்பதாகவும்  சொல்கின்றனர் குமரி மாவட்ட அரசியல் தெரிந்தவர்கள்.   கடந்த 2019 ல் … Read more