மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்தி மூவர் திருவிழா கொண்டாட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்தி மூவர் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.இவ்விழாவில், பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகன பெருவிழா, சூரிய வட்டம், சந்திரவட்டம், அதிகார நந்தி வாகனத்தில்சுவாமி எழுந்தருளல் உள்ளிட்டவிழாக்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் … Read more

தஞ்சை: மேளதாளம் முழங்க பாரம்பரிய நடனத்துடன் தொடங்கிய நாட்டுப்புறக் கலைவிழா

தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா தொடங்கியது. தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த கலை விழாவைத் தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா இன்று தொடங்கியது. இந்த … Read more

ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்திய நீதிபதி.. மீண்டும் புதிய வகை வைரஸ்.. மேலும் செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read more

காவல்துறையினர் பணி நேரத்தில் இனி இதை செய்யக்கூடாது-காவல்துறை ஆணையர்.!

பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அலுவலகத்தில் சக பணியாளரை செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்தவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அலுவலகங்களில் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இதற்கான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். … Read more

விதிகளை மீறி தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டம் ஒதுக்கீடு: மின் வாரியம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: விதிகளை மீறி தனியார் நிறுவனத்துக்கு, ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டத்தை மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019 டிசம்பர் மாதம் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்து தொடர்பாக, தனியார் நிறுவனத்துக்கு மின் வாரியம் முதல்கட்ட ஒதுக்கீடு கடிதம் கொடுத்துள்ளது. ஆனால், அந்த நிறுவனம் ரூ.440 கோடி வங்கி உத்தரவாதம் கொடுக்க முடியாததால், … Read more

வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்ட வேதா நிலைய வைப்புத்தொகை: எவ்வளவு தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த அரசு செலுத்திய வைப்புத்தொகை வட்டியுடன் திருப்பி தரப்பட்டுள்ளது. வேதா நிலைய இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற உத்தரவிட்ட கடந்த அதிமுக அரசு, வைப்புத்தொகையாக ரூ.67,90,52,33 செலுத்தியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபாவும் தீபக்கும் தொடர்ந்த வழக்கில், வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்தியது செல்லாதென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட முடிவெடுத்துள்ளதாக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் … Read more

அண்ணாமலைக்கு புரிதல் இல்லை: முறைகேடு புகார்களுக்கு செந்தில் பாலாஜி பதில்

தமிழ்நாடு பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை தற்போது கேட்டுள்ளார் என்றும் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் … Read more

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்.. அதிமுகவின் முக்கிய புள்ளியை சந்திக்கப்போகும் சசிகலா.? கலக்கத்தில் அதிமுகவினர்.!!

அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அரசியலில் மும்முரமாக இறங்குவார் என எதிர்பார்ப்பதில்லை, ஓய்வு அறிவித்து ஒதுங்கி இருந்தார். ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து அதிமுக படுதோல்வியை சந்தித்தது.  இதனால் ஒற்றை தலைமை வேண்டுமென அதிமுகவில் மீண்டும் குரல் எழுந்துள்ளது. மேலும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனவும் குரல் எழுந்துள்ளது. … Read more