மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தின் குடும்பத்தினர்.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்த இளமுருகன்-ராதா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி ராதா கணவனிடம் கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் மனைவியின் பிரிவை தாங்க முடியாத இளமுருகன் தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அழைத்துள்ளார். ஆனால் ராதா நான் வரவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவி தனது … Read more

மார்ச் 27ம் தேதி முதல் ”தூத்துக்குடி – பெங்களூரு இடையே தினசரி பயணிகள் விமான சேவை”

தூத்துக்குடி – பெங்களூரு இடையே வரும் மார்ச் 27ம் தேதி முதல் தினசரி பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மட்டும் தூத்துக்குடி – பெங்களூரு இடையே விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற பிரதமரின் கதி சக்தி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் … Read more

”சமூக நீதி வரலாற்றில் 2-வது மிகப் பெரிய வெற்றி” – உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு குறித்த தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு, சமூக நீதியைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள மகத்தான தீர்ப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும் , சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு … Read more

திருச்சியில் நாளை தொடங்கும் 'பிரக்யான்' சர்வதேச தொழில்நுட்ப விழா

என்.ஐ.டி திருச்சியில் நாளை (17ஆம் தேதி) தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை ‘பிரக்யான்’ என்ற சர்வதேச தொழில் நுட்ப – மேலாண்மை விழா நடைறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களது கண்டுபிடிப்புகளுக்கு இடையிலான போட்டிகள் நேரடியாகவும், இணைய வழியாகவும் நடத்தப்பட்டு ‘பிரக்யான்’ விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. என்.ஐ.டி மாணவர்கள் ஒவ்வொறு ஆண்டும் ‘பிரக்யான்’ விழாவினை நடத்தி வருகிறார்கள். நாளை தொடங்கப்படவுள்ள இவ்விழாவில் அறிவூட்டும் சொற்பொழிவுகள், வியக்கவைக்கும் தகவல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள், … Read more

பூண்டு, கருப்பு மிளகு… சளி, காய்ச்சல் தொல்லைக்கு வீட்டிலேயே தீர்வு!

Effective home remedies to treat cold, flu: சளி, இருமல், ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவான நோய்களாகும். இதற்கான சிகிச்சையில் பொதுவாக ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படும். இவை தவிர உப்பு நீர் வாய் கொப்பளிப்பது, மூலிகை தேநீர், சூடான சூப் மற்றும் நீராவி குளியல் போன்ற சில வீட்டு வைத்தியங்களும் செய்யப்படுகின்றன. சூப் ஜலதோஷத்திற்கு நல்லது என்று கருதப்படுவதற்கு ஒரு பெரிய காரணம், பெரும்பாலான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் அதில் உள்ளன … Read more

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்.!

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று நற்சான்றிதழ்களை வழங்கினார். தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள … Read more

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு.. சீர்வரிசையுடன் சிறப்பித்த குடும்பத்தினர்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் ஒரு குடும்பத்தினர் தங்களது வளர்ப்பு பெண்நாய் 9 மாதங்கள் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டூடியோ கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தனது வீட்டில் பொமேரியன் வகையை சேர்ந்த 2 பெண் நாய்களை வளர்த்து வருகிறார். அதில் சாரா என்ற நாய் கர்ப்பம் தரித்து 9 மாதங்கள் ஆன நிலையில் அதற்கு வளைகாப்பு … Read more

திமுக ஆட்சியில் அமளிப் பூங்காவாக மாறியிருக்கிறது தமிழகம்: ஜெயக்குமார் விமர்சனம்

திருச்சி: “அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் அமளிப் பூங்காவாக மாறியுள்ளது” என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இன்று 2-வது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னோடிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, அதிமுகவை ஒழித்துவிடலாம் என்ற … Read more

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்: பார்த்து பரவசமடைந்த சுற்றுலா பயணிகள்

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற இழுவைக் கப்பல், விசைப் படகுகளை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்வையிட்டனர். மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மும்பை செல்வதற்காக நேற்று இரவு இழுவைக் கப்பல் ஒன்று பாம்பன் வடக்கு கடற்கரை பகுதிக்கு வந்தடைந்தது. இதையடுத்து பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்கான அனுமதியை துறைமுக அதிகாரிகளிடம் பெற்று ரயில் … Read more

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thanjavur NIFTEM recruitment 2022 apply soon: தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில், துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். துணை ஆசிரியர் (Adjunct Faculty) காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : M Tech./M.Sc./Ph.D. with specialization in Post-Harvest … Read more