சீர்காழி அருகே ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற கோயில் சிலைகள் மீட்பு-குருக்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 2 கோயில் சிலைகளை மீட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோயில் குருக்கள் ஒருவரை கைது செய்துள்ளனர். சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்திலுள்ள கோயில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நெம்மேலி அ.மி.விசாலாட்சி விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து கருவறையில் அம்மன் சிலைக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக நெம்மேலி … Read more

'நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும்' – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகனது திருமண விழா திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றுது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேருவின் கட்சி சார்ந்த பணிகள் குறித்து பாராட்டி பேசினார். அவரது சகோதரர் … Read more

திருப்பூரில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தினர்… போலீஸ் வளையில் சிக்கியது எப்படி?

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி முறைகேடாக தங்கயிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ள வங்கதேசத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி அருகே சந்தேகப்படும் விதமாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி முறைகேடாக சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்தவர்கள் வங்கதேசத்தினர் என்பது தெரிந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறிய இவர்கள், … Read more

ஐபிஎல் 2022: தீபக் – ருதுராஜ் சிஎஸ்கே அணியில் இணைவது எப்போது? நீளும் கேள்விகள்!

15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் போட்டிகள் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் தொடரில் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது. … Read more

தமிழர் நலனுக்காகவும், தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் – இ.பி.எஸ்.!!

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் மற்றும் எஸ் எஸ் தேர்வில் பங்கேற்ற … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஏப்.8 மாலை நேரில் ஆஜராகும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஒத்தக்கடை அருகே காளிகாப்பன், வீரபாஞ்சான் பகுதியில் வருவாய் ஆவணங்களில் பேட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை 38 பேர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் … Read more

உருட்டி, மிரட்டி ஓட்டிய வீரர்கள் – தடதடவென தாவி ஓடி பரிசுகளை வென்ற மாடுகள்

கடலாடி அருகே மாசா முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே திருஆப்பனூர் ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோயில் மாசா முளைக்கட்டு திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டிக்கு பந்தயத்திற்கு 12 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் … Read more

எஸ்.பி வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிக்கை

Tamilnadu News Update : தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் லஞ்சஒழித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய  நிலையில், நேற்று 2-வது முறையாக மீண்டும் சோதனை நடத்தினர். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 42 இடங்கள் … Read more

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும்.. மத்திய, மாநில அரசுகளை ஓ.பி.எஸ் வலியுறுத்தல்.!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் … Read more

பி.எஃப். வட்டி விகித குறைப்பை மறுபரிசீலனை செய்க: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா. தொழில்கள் வளர வேண்டும், … Read more