ரஷ்யா உடன் அமைதி பேச்சு வார்த்தை நிறைவு; ஐரோப்பிய யூனியன் இணைப்பு விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர்

Ukraine Russia peace talk ends: ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொண்டன. இதனையடுத்து, அமைதி பேச்சு வார்த்தை ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ரஷ்யா … Read more

#சற்றுமுன் || வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலின் தென் பகுதியில் உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும். … Read more

வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவன் <!– வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவன் –>

வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்பதே தமது எண்ணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் … Read more

மாநிலங்களுக்கு அதிக அதிகாரமளிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்: ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று தனது நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். ‘தலைவர் கருணாநிதியைப் போல எனக்கு எழுதத் தெரியாது. … Read more

”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்”-சுயசரிதை நூல்வெளியீட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மாநிலங்களின் உரிமைகள் பறிபோவதால், அம்மாநில மக்களின் அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உங்களின் ஒருவன் மு.க. ஸ்டாலின் என்ற சுயசரிதை நூல் வெளயீட்டு விழாவில் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். மு.க. ஸ்டாலினின் முழு பேச்சை கீழே உள்ள வீடியோவில் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

MK Stalin Book Release Live: எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் – மு.க.ஸ்டாலின் ஏற்புரை

Go to Live Updates MK Stalin Book Release Live: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நுலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற இந்த நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். நூல் வெளியிட்டு விழாவில், கேரள முதலமைச்சர் … Read more

#தமிழகம் ||  சாலை விபத்தில் 14,912 பேர் பலி.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.!

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் இறப்பு 107% அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் புள்ளிவிவரபடி, 2021-ல் தமிழகத்தில் நடந்த 55713 வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 14,912 தங்களின் உயிரை பலிகொடுத்துள்ளார். இதில்,  இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் பலியாகியுள்ளனர்.லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.கார்கள் விபத்துகளால் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.வேன் மற்றம் சிறிய … Read more

மகள் திருமணத்துக்கு 33 ஆண்டுகளாக சேர்த்த 92 சவரன் நகை திருட்டு <!– மகள் திருமணத்துக்கு 33 ஆண்டுகளாக சேர்த்த 92 சவரன் நகை தி… –>

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 92 சவரன் நகைகள் திருடு போனது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் உதவி மேலாளராகப் பணி புரியும் சுரேஷ் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டு கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து சுரேஷிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகளின் … Read more

மாநில  உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது: பினராயி விஜயன்

சென்னை: கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் … Read more

"3 அலைகளிலும் இதுதான் முதன்முறை" – தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகம் இதுவரை சந்தித்துள்ள 3 அலைகளிலும் முதன்முறையாக 400 க்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,994 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் சராசரியாக 0.7 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் அளவிற்கு தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கோவிட் முதல் காலகட்டத்தில் 2020 ஜீலை 27 … Read more