சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 34 கோடியே … Read more

‘மைதானத்தில் மட்டுமல்ல, டான்ஸும் ஆடுவாங்க!’ அனிருத் பாட்டுக்கு செம ஸ்டெப் போட்ட பி.வி சிந்து

பேட்மிண்டன் (இறகு பந்து) விளையாட்டில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் (1995 ஜூலை 5) பிறந்த இவர், 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவரின் இந்த தொடர் வெற்றிகள் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் … Read more

மாயமான பெண் சடலமாக மீட்பு… காவல்துறை தீவிர விசாரணை…!

மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருமலை கொழுந்து புரம் பகுதியை சேர்ந்தவர் மாதா. இவர் வீட்டின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.  ஆனால், அவரை எங்கும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றங்கரை … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிப்பு எனத் தகவல் தங்க நகைகள் மற்றும் 118.506 கிலோ வெள்ளி பொருட்களும் கண்டுபிடிப்பு என லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கணக்கில் வராத பணம் 84 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டது – லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.34 லட்சம் மதிப்பில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் Source link

ஜீவா பேரனுக்கு அரசுப் பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தரசன் பாராட்டு

சென்னை: அமரர் ப.ஜீவானந்தம் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்க முன்னோடியாகவும் விடுதலைப்போராட்ட வீரருமாகத் திகழ்ந்தவர். ஜீவாவின் பேரனுக்கு அரசுத்துறையில் பணிநியமனம் வழங்கியமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழார்ந்த தலைவர் பேராசான் ப.ஜீவானந்தத்தின் மகன் வழி பேரன் ம.ஜீவானந்தத்திற்கு நேற்று (14.03.2022) முதல்வர் மு.கஸ்டாலின் – தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் … Read more

லேட்டாக வந்ததால் ஆசிரியர் நடவடிக்கை: 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

திருச்செங்கோடு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் எடுத்த நடவடிக்கை காரணமாக மனம் உடைந்து 9 ஆம் வகுப்பு மாணவி 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் காலதாமதமாக வகுப்புக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரை ஆசிரியர் 10-15 நிமிடங்கள் வரை வெளியே நிற்க வைத்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து … Read more

திரௌபதி அம்மன் சிலையை ஆனந்த கண்ணீருடன் வழி அனுப்பி வைத்த குடும்பத்தினர்.!!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, பெரியமதகு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் 200 வருடம் பழமையான திரௌபதி, கிருஷ்ணர், அர்ச்சுனர் ஐம்பொன் சுவாமி சிலைகள் உள்ளன. சாலக்கரை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு, கடந்த 52 வருடம் முன்னதாக ஸ்ரீ திரௌபதியம்மன் கோவிலில் இருந்து மேற்கூறிய 3 சுவாமி சிலைகளும் எடுத்து செல்லப்பட்டுள்ளன.  ஆனால், இந்த சிலைகள் மீண்டும் பெரியமதகு திரௌபதி அம்மன் கோவிலுக்கு கொண்டு … Read more

”வாக்குச்சீட்டுகளை பறித்தவரை கைது செய்யாதது ஏன்?” – ஆடுதுறை மறைமுக தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது வாக்குச்சீட்டை எடுத்து சென்றவரை தேர்தல் அதிகாரியும், காவல்துறையும் தடுக்காத விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. … Read more

வருமானத்தை விட 3,928% அதிகமாக சொத்து குவிப்பு – எஸ்.பி வேலுமணி வீட்டில் மீண்டும் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை 6 மணி முதல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. மேலும், எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன், அன்பரசன் … Read more

வட்டிக்கு பணம் வாங்கிய பணத்தை திருப்பி தராத சலூன் கடைகாரர்… அடுத்த நடந்த விபரீதம்..!

பணம் கொடுக்கல் வாங்கலில் சலூன் கடைக்காரர் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் சசிகுமார். இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சசிகுமார் வீட்டிற்கு சென்று இரண்டு பேர் அவரை வெளியே வரவழைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து  காவல்துறையினர் … Read more