போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்

பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என கூறிய திமுக கவுன்சிலரை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான போஸ்டரை அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவர், சேகர் வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளார். இதையடுத்து என் வீட்டின் சுவற்றில் அ.தி.மு.க. போஸ்டரை ஒட்டக்கூடாது என்று சேகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தி.மு.க. கவுன்சிலர் சேகரை … Read more

பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க இந்தியா எதிர்ப்பது, உலக நலனுக்கு எதிரானது – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

 வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்புக்கான பேச்சுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை (United Nations Environment Assembly) மாநாடு கென்யாவின் தலைநகர் நைரோபியில் இன்று தொடங்குகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின்  நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; … Read more

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கிய 5 பேர்.! <!– தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு ப… –>

தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதிக்கும், பொன்னம்மாளின் தம்பி ஞான திரவியம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞான திரவியம் குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து சொத்தை எழுதித் தருமாறு கேட்டு பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தம்பதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் உரிய விசாரணை நடத்த … Read more

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்றக் கோரி மாணவ மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள சத்திய மூலம் நகராட்சி பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 508 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள 11வகுப்பு அறையின் அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் சாப்பிட வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடம் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் மேற்கூரைகள் … Read more

ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை பின்னணி

Tejashwi attend Stalin’s Book release event in Chennai: சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தேஜஸ்வி யாதவ், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜக் … Read more

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, 2.3.2022 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி … Read more

ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை.. <!– ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அட… –>

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் மறுநாளான சனிக்கிழமை அதே பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து … Read more