'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

கறம்பக்குடி அருகே வாகன தவணை தொகையை கட்டவில்லை என தாய் மகன் மீது தனியார் வங்கி ஊழியர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெத்தாரிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி பராசக்தி. தர்பூசணி பழ வியாபாரம் செய்து வரும் பராசக்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் கடன் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பழ வியாபாரம் செய்து … Read more

இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!

Medic benefits of cloves in tamil: இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது. அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற … Read more

ஓயாது உழைப்பேன்.. உற்சாகமாக உழைப்பேன்.. பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட கடிதம்.!!

தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் இமாலய வெற்றியை – மகத்தான … Read more

பராமரிக்கப்படாத "ஏசி"யால் பற்றிய தீ.. கருகிப் போன 2 வயது குழந்தை.! <!– பராமரிக்கப்படாத &quot;ஏசி&quot;யால் பற்றிய தீ.. கருகிப் போன 2 வயது … –>

சென்னை பல்லாவரம் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், முறையாகப் பராமரிக்கப்படாத ஏசியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசி இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் யசோதா நகர் பகுதியில் வருபவர்கள் மோகன் … Read more

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

உக்ரைன் மீது படையெடுப்பு: பின்லாந்து, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராவதை ரஷ்யா எதிர்ப்பது என்?

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். உக்ரைனின் நிலைமை தொடர்பாக காணொலி வழியாக நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! டிராவில் முடிந்தது தமிழகம் சத்தீஷ்கர் இடையிலான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம், சத்தீஷ்கர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் … Read more

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! <!– விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந… –>

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த 36 வயதான ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், … Read more