வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!

Namakkal Revenue department recruitment 2022: வருவாய்த்துறையில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு, அதுவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும். இந்த அருமையான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி-வானிலை ஆய்வு மையம்.!

வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 18 மற்றும் மார்ச் 19ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான … Read more

கன்னியாகுமரியில் தவணைத் தொகையை கட்டத் தவறியதால் நள்ளிரவில் தனியார் பள்ளி வாகனங்களைத் திருட முயற்சி?

கன்னியாகுமரி அருகே 75 லட்ச ரூபாய் தவணை பாக்கிகாக நிதி நிறுவனம் ஒன்று இரவோடு இரவாக தனியார் பள்ளிக்குள் புகுந்து வாகனங்களைத் எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நித்திரவிளை – கிறிஸ்துராஜபுரம் பகுதியில் ஜெயமாதா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 வாகனங்கள் மாணவர்களை அழைத்து வர இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்கிழமை காலை வழக்கம்போல் வாகனங்களை எடுக்க ஓட்டுநர்கள் வந்தபோது 6 வாகனங்களில் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்று காணாமல் போயிருந்தது. மற்ற … Read more

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி: 2020-2021-ல் பிரீமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாகுபாடின்றி அனைத்து பயிர் வகைகளும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; 2020-21-ம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மக்காச்சோளம், உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க … Read more

"வாடகை கட்ட தவறினால் வயர்களை அறுத்துவிடுவோம்" – சென்னை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகையை உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரு விளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமற்ற மற்றும் தடவாடகை செலுத்தாத கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களின் 75 கிலோ மீட்டர் நீள வயர்கள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக தடவாடகை செலுத்தாத நிறுவனங்களின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகள் தொடரும் என்றும் மாநகராட்சி ஆணையர் … Read more

3 அமைச்சர்களுடன் ஆளுநர் ரவியை சந்தித்த ஸ்டாலின்: பேசியது என்ன?

TN Governor assured to CM to send NEET exemption bill to President: நீட் விலக்கு மசோதாவை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக, முதல்வரிடம் கவர்னர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது, … Read more

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் விபத்து .. சிறுமி உடல் சிதறி பரிதாப பலி..!

சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி மருந்து விபத்தில் 10 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்,  ஆறுதெங்கன்வினை பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் தனது வீட்டிலேயே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் வைத்திருந்த  வெடி மருந்து திடீரென வெடித்தது. இதில், அவரின் 10 வயது மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மனைவி பார்வதி படுகாமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் … Read more

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்த போலீசார்.!

திருப்பூரில், முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லடம் சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து வீரபாண்டி போலீசார் விசாரித்த போது, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உரிய ஆவணங்களின்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்ததும் சிலர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்த … Read more

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு ஊழியர்கள் பணி நேரங்களில் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 4 வாரத்தில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சுகாதாரத்துறை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் டி.எஸ்.ராதிகா. இவர் மீது பணியிடத்தில் செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும், அப்போது செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரி மற்றும் காவலரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் ராதிகாவை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறை இயக்குநர் பணியிடை … Read more

சிவகாசி: திருமணத்தை மீறிய உறவால் இருவர் எடுத்த விபரீத முடிவு

சிவகாசி அருகே திருமணத்தை மீறிய உறவால் 2 பேர் தற்கொலை. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ராமலட்சுமி (32), தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பன்னீர் செல்வம் என்பவருக்கும் ராமலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். … Read more