தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும்… டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம் – ராமதாஸ்

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்றார். திரைப்படங்களில் புகை பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக கூறி “திரைப்படங்களில் கால் மீது கால் போட்டு ஹீரோக்கள் எப்படி புகை பிடிக்கிறார்கள்” என்பதை நடித்துக் … Read more

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் செல்ல 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மேலும் கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் … Read more

எஸ்பி வேலுமணி மீது இரு வழக்குகள் – பின்னணி என்ன?

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த ஆண்டு ஒரு வழக்கு, இந்தாண்டு ஒரு வழக்கு என இரு வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. இவ்விரு வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள முக்கிய விவரங்களின் ஒப்பீட்டை தற்போது காணலாம். எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கு … Read more

ரஷ்யாவின் எண்ணெய் வாங்க பரிசீலிக்கும் இந்தியா; ரஷ்யா மீது ஐ.சி.ஜே தற்காலிக உத்தரவு

இன்று, (மார்ச் 15) உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 21வது நாள். போரைப் பற்றி விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம். துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறக்கும் பொதுமக்கள் போரில் சிக்கிய மக்களுக்கு போரின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.. மார்ச் 13ம் தேதி வரை நடந்த போரில் 636 பொதுமக்கள் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. போரில் கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை குறித்து சரியான எண்ணிக்கை … Read more

இடுகாட்டில் தற்கொலை செய்து கொண்ட கள்ளகாதல் ஜோடி.. சிவகாசி அருகே நிகழ்ந்த சோகம்..!

திருமணத்தை மீறிய உறவால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி, பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம்  என்பவருக்கும் இடையில் திருமணத்தை கடந்த உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக இரு குடும்பத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், மனமுடைந்த ராமலட்சுமியும் பன்னீர் செல்வமும், மேலப்பாளையபுரம் கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். … Read more

”அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு வேண்டும்” வழிகாட்டுதல்களை பிறப்பிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இது தொடர்பான உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பணியின் போது செல்போனில் வீடியோ எடுத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அலுவலக நேரத்தில் ஊழியர்கள் செல்போனை பயன்படுத்தி எடுக்கும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்படுவதாக கூறிய நீதிபதி, … Read more

ஹிஜாப் விவகாரம் | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு: ஜவாஹிருல்லா கருத்து

திருச்சி: ”ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புக்கு முரணானது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி பிரதிநிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் இன்று நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்த எம்.எச்.ஜவாஹிருல்லா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஹிஜாப் வழக்கில் … Read more

பிரியாணி மீதான காதலை எந்த தீயசக்தியாலும் அழிக்கமுடியாது -வாசகர்களின் கமெண்ட்ஸ்#LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 14-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக `பிரியாணி பற்றிய சமூக வலைதள சர்ச்சை… ஆரோக்கியத்தின் மீதான அக்கறையா? உணவை வைத்து செய்யப்படு மத அரசியலா?’  … Read more

ரேஷன் கடைகளில் 4000 ஊழியர்கள் நியமனம்… அறிவிப்பு எப்போது?

Tamilnadu Ration Employee Update : ரேஷன்கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில்,  மாவட்ட வாரியாக ரேஷன் கடைகளுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இறங்கி வரும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் எடையாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றன்றனர். இதனால் பல ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று ரேஷன் கடைகளை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் ஊழியர்கள் மிகுந்த … Read more

தலைக்கேறிய மதுபோதை… தந்தையை கொன்ற மகன்..!

மது போதையில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அவ்வை நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி விஜய லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனால், அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த சங்கர் தனது தாய் ராணியுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்ததால்  … Read more