5 மாநில தோல்வி: சோர்ந்து கிடக்கும் எதிர்க் கட்சிகளை மீண்டும் ஒன்று திரட்டும் ஸ்டாலின்!

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், சோர்ந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் களம் அமைக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரக்காண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த … Read more

கேபிள் டிவி, இண்டர்நெட் தட வாடகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!

கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது.   மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனி கம்பங்கள் அமைத்தும் … Read more

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கங்காதர ஈஸ்வரர் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு  மூலவருக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வரப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.  Source link

ஜாமீனில் விடுதலையானார் பேரறிவாளன் | முழு விடுதலை கிட்டும் வரை ஒத்துழைப்புத் தாருங்கள்: அற்புதம்மாள் கோரிக்கை

திருவள்ளூர்: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பேரறிவாளன் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். முழுமையான விடுதலை கிடைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 9-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இன்று புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18 மற்றும் 19 … Read more

‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி’ பைக்கில் கெத்து காட்டும் இளைஞர்

Tamilnadu News Update : கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்ஆர் காந்தி என்ற ஆங்கில வாசகத்துடன் பைக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைராக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எம்.ஆர்.காந்தி. 73 வயதாகும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவாரான இவர், 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்ஆர் … Read more

தமிழகத்தில் மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.!!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹிந்தி தட்டச்சர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் பணியின் பெயர் : ஹிந்தி தட்டச்சர் கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு பணியிடம் : சென்னை தேர்வு முறை … Read more

ஆசை பட பாணியில் மனைவியை கொன்ற பாரின் ரிட்டன் கணவர்..! காதல் வண்டாக மாறிய பெண்ணால் விபரீதம்

நாகர்கோவில் அருகே ஆசை சினிமா பட பாணியில் மனைவியின் தலையில் பிளாஸ்டிக் கவர் சுற்றி கொலை செய்த கணவர், தானும் உயிரை மாய்த்துக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேந்தவர் ஜோஸ். மீனவரான இவர் வெளிநாட்டில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி செய்து வந்தார். கடந்த டிசம்பம் மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஜோஸ், குளச்சலில் இருந்து கோட்டாரு பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்து தனது மனைவி வனஜா மற்றும் … Read more

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

சென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழக சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி … Read more

கோவை: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கோவை துடியலூரில் முதல் மாடியில் இருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய், 2 மகள்கள், நாய் உட்பட 4 உயிர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூர் அடுத்த உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விஜயலட்சுமி. இவரது கணவர் ஜோதிலிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்ட நிலையில், அர்ச்சனா (25), அஞ்சலி (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை … Read more