சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

சென்னை: தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியிருந்தார். முன்னதாக, … Read more

அலையில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள் – மெரினா கடலில் குளித்த போது நேர்ந்த பரிதாபம்!

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் 9 மாணவர்களும் குளித்து வந்தனர். திடீரென குளித்து கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். அதிர்ச்சியடைந்த  சக மாணவர்கள் இது குறித்து மெரினா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் தீவிரமாக … Read more

சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்த 31 ஏக்கர் அரசு நிலம்: காலி செய்ய தமிழக அரசு கெடு

தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்த்ரா) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அகற்றுமாறு பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் பிப்ரவரி 25 அன்று நோட்டீஸ் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோட்டீஸானது, திருமலைசமுத்திரம் கிராமத்தில் நிலங்களை ஒதுக்கீடு, அந்நியப்படுத்துதல் அல்லது பரிமாற்றம் செய்வதற்கான சாஸ்த்ராவின் மனுவை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து வந்தது. மாவட்ட வருவாய்த் துறை 1985 இல் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி, அங்கிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இவ்விவாகரத்தில் … Read more

தொடரும் கைதுகள் : மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தொடரும் கைதுகள் : மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்  8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்! பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கை … Read more

பாரம் தாங்காமல் மண்சாலையில் சிக்கிய லாரி.. திருவண்ணாமலை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.. <!– பாரம் தாங்காமல் மண்சாலையில் சிக்கிய லாரி.. திருவண்ணாமலை … –>

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சீரமைப்பு பணியின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மண்சாலையில் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி சிக்கிக் கொண்டதால், திருவண்ணாமலை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், வாகனங்கள் செல்ல ஏதுவாக சிறுவாடி காப்புக்காடு பகுதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, அதிக … Read more

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் … Read more

"நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு" – ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

மார்ச் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு. தமிழ்நாட்டில் அரிதான நிகழ்வாக வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. Time for an weather post for an significant event after a … Read more

Russia Ukraine Crisis Live: முதல்வரின் முயற்சியால் மாணவர்கள் மீட்பு: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Go to Live Updates உக்ரைனிலிருந்து இரண்டாம் விமானம் வருகை உக்ரைனில் இருந்து புறப்பட்ட இரண்டாம் விமானத்தில் தமிழக மாணவர்கள் 5 பேர் உள்பட 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ருமேனியாவின் புகாரெஸ்ட் வழியாக வந்தவர்களை மத்திய அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா வரவேற்றார். முன்பு வந்த விமானத்தில் 219 இந்தியர்கள் மும்பை வந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார். கீவ் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது – உக்ரைன் அதிபர் கீவ் நகரம் இன்னும் எங்களது … Read more

சுந்தரபாண்டியம் பேரூராட்சி : அதிமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 7 அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. இதனையடுத்து மாற்று கட்சி கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது இந்த பேரூராட்சியில் திமுக 7 வார்டுகளையும், அதிமுக 7 … Read more

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் <!– 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து மு… –>

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் சொட்டு மருந்து முகாம்கள் அமைப்பு 57.61 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு 2 லட்சம் பணியாளர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர் Source link