மின்சாரம் தாக்கி துடிதுடித்த கணவன்: காப்பாற்றச் சென்ற மனைவி குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் (30). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், நேற்று காலை தனது வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட நிவாஸ் ரத்தினம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் துடி துடித்த கணவரை காப்பாற்ற அவரது மனைவி ஹேமா (25) … Read more

Tamil News Today Live: ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – பெங்களூரில் 144 தடை

Go to Live Updates Tamil Nadu News Updates: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் 131வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், … Read more

எஸ் பி வேலுமணியை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ.. அதிர்ச்சிகள் அதிமுகவினர்.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58,23,97,052 கோடி (3928%) சொத்துக் குவித்த காரணத்தால், எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கோவை மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது   சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஊரக … Read more

பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக காக்னிசன்ட் நிறுவனத்துடன் கல்வித் துறை ஒப்பந்தம்: வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நியமன ஆணையை ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், காக்னிசன்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறைபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜீவா பேரனுக்கு அரசுப் பணி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விடுதலைப் போராட்ட வீரரும்,பொதுவுடைமை சிந்தனையாளருமான ஜீவானந்தத்தின் (ஜீவா) பேரனான, மாற்றுத் திறனாளி ம.ஜீவானந்துக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் காலியாக உள்ள … Read more

‘வருமானத்திற்கு அதிகமாக 3,928% சொத்து’- எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் அமைச்சர் வேலுமணியிsன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதேபோன்றதொரு சோதனையை நடத்தியிருந்தனர். அப்போது அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது பங்குதாரர்கள், இல்லங்கள், அலுவலர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் … Read more

வலிமை சிமெண்ட், அம்மா குடிநீர் போல கலைஞர் அரிசி… விவசாய பட்ஜெட்டில் காங்கிரஸ் கோரிக்கை

திமுக அரசின் 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயத்துக்கான தனி பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி, இந்த ஆண்டும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயத்துக்கான பட்ஜெட் தயாரிப்பதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் திங்களிழமை (மார்ச் 14) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் … Read more

பிரபல இயக்குனர் கௌதமன் தூத்துக்குடியில் கைது.!

தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமனை தூத்துக்குடி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும், காந்தாரி அம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கௌதமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். இந்த … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக சிறுமி வீடியோ வெளியிட்ட விவகாரம், வீடியோவைப் பகிர்ந்தால் நடவடிக்கை – போலீசார் எச்சரிக்கை

செங்கல்பட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமி வெளியிட்டிருந்த வீடியோவில் தனது உறவினர் ஒருவர், தனக்கும் சகோதரிக்கும் பாலியல் தொல்லை அளிக்கிறார் என்றும் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுமி குறிப்பிட்ட தினேஷ் குகன், எல்லப்பன், கோபால கிருஷ்ணன் ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரம் அதே பகுதியைச் சேர்ந்த … Read more