நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.. பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்..!

நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்தை  கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடித்தத்தில் தெரிவிக்கப்படுள்ளது, தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் … Read more

நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.2.50 கோடி கொள்ளை..!

மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி இரண்டரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அவரது கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான தர்மராஜ், தொழில் நிமித்தமாக இரண்டரை கோடி ரூபாய் பணத்துடன் தனது கடை ஊழியர் கோவிந்தராஜ் என்பவரோடு காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். காரை அவரது ஆக்டிங் டிரைவர் பிரவீன் குமார் என்பவன் ஓட்டிச் சென்றுள்ளான். திருமங்கலம்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேசநேரி என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக … Read more

மார்ச் 14: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.13 வரை மார்ச்.14 மார்ச்.13 … Read more

கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி.வேலுமணி; வைரல் வீடியோ

Former Minister SP Velumani Oyilattam dance video goes viral: கோவையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம்  ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கணியூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கி, வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக  சனிக்கிழமை இரவு கோவிலில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் … Read more

மனைவி மீது சந்தேகம்.. மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை..!

மனைவியை கொலை செய்து விடு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் . இவருக்கு திருமணமாகி வனஜா  என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார். இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. … Read more

மலைப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கும் கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கொடைக்கானல் மச்சூர் தோகைவரை வனப்பகுதி, கொழுமம் வனப்பகுதி, பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடைவரை வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்திய நிலையில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகி நாசமாகின. இந்நிலையில், வெள்ளைப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்ட பகுதிகளில் தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது.இதனை … Read more

மார்ச் 14: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு: பெருங்களத்தூர் மேம்பாலம் தயாராவது எப்போது?

சென்னைக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்பு பாலமாக பெருங்களத்தூர் இருக்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான ஒரு பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை மேம்பாலம் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.தென் தமிழகத்தின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு புறம் மே மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு … Read more

டிகேஎம்9 ரக நெல் கொள்முதல் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு.!

டிகேஎம்9 ரக நெல்லை கொள்முதல் செய்யப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் முறைகளில் சில மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை நெல்லினை அரவை செய்து அதன் மூலம் பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக … Read more

உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட யானை பறிமுதல்

ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நள்ளிரவில் வனச்சரகர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உள்ளே யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்களும் இல்லாததால் யானையை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாகனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யானை … Read more