கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, இளைஞர் தற்கொலை.. தஞ்சாவூரில் பரபரப்பு.!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கட்டாநகரம் என்ற கிராமத்தில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். முருகேசனுக்கு விஜய் என்ற மகன் இருக்கிறார். இவர் காரைக்காலில் தனது தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.  சில நாட்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இத்தகைய சூழலில், திடீரென்று நேற்று அதே பகுதியில் அமைந்திருக்கும் வாய்க்காலுக்கு அருகில் அமர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அப்போது அவர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி … Read more

கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கு ; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவக்குமார் என்பவனிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி இருந்தார். தவணைப் பணத்தை கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சிவக்குமார், அதனை வீடியோவாக எடுத்து இணையத்திலும் வெளியிட்டான். அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுச்சாமியின் உதவியுடன் இதுகுறித்து பெண்ணின் தாய் போலீசில் … Read more

மார்ச் 18-ல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இந்த மாதம் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

முருகனுக்கு பரோல் வழங்கிடக்கோரி அவரது மாமியார் மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முருகனின் மாமியார் பத்மா தாக்கல் செய்திருக்கும் மனுவில், தனது மகள் நளினி பரோலில் இருப்பதால், மருமகன் முருகனுக்கும் விடுப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நளினி தனது கணவருக்கு விடுப்பு வழங்கும்படி மனு அளித்தும் சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பத்மா குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால், 30 … Read more

சொகுசு கார் வழக்கு: நடிகர் விஜயிடம் ரூ30 லட்சம் அபராதம் வசூலிக்க ஐகோர்ட்டில் அரசு முறையீடு

TN Commercial tax dept appeal against Actor Vijay on imported car tax case: நடிகர் விஜய் சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூ.30 லட்சம் அபதாரம் வசூலிக்க தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து … Read more

மாணவர்களை புதிய உச்சத்திற்கு அழைத்து செல்லும் புதிய கல்விக் கொள்கை! தமிழிசை சௌந்தரராஜன் தகவல்.!

புதிய கல்விக் கொள்கை இந்திய மாணவர்களை உலக அளவில் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். … Read more

கார் நுழைவு வரி விவகாரம், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் – வணிக வரித்துறை

இறக்குமதி செய்த கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வணிக வரித்துறை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 2005ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. காருக்கு, 2019ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, விஜய் நுழைவு வரியாக 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், வரி செலுத்தாத காலத்திற்கு அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வழக்கு … Read more

'கடும் பாதிப்புகளை கருத்தில் கொள்க' – தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேனி மாவட்டத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தைக் கைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14) கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் … Read more

'சிவப்பு நிற அரிசியை மக்கள் வாங்க விரும்பவில்லை' – அரசு எடுத்த முக்கிய முடிவு

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்திலும், சற்று பருமனாகவும் இருப்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை மக்கள் வாங்க விரும்புவதில்லை என அரசு தெரிவித்துள்ளது. அதனால், மக்கள் விரும்பாத அரிசியை பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை … Read more

27 ஏக்கர்… ரூ5,000 கோடி முதலீடு… 70,000 பேருக்கு வேலை… அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!

CM Stalin laying foundation stone to DLF DownTown IT Campus: சென்னை தரமணியில், ரூ 5000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் 70000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் அமையவுள்ள டி.எல்.எஃப் டௌண்டவுன் வளாகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  ரூ.5000 கோடி முதலீட்டில், 6.8 மில்லியன் சதுர அடியில், 27 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் … Read more