தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது: பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: ”திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள் கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டப்பேரவை … Read more

விருதுநகர்: சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல, வரும் மார்ச் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இக்கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more

விளையாட்டுத்துறையில் சாதிக்க விருப்பமா? தமிழக அரசின் அருமையான வாய்ப்பு

Tamilnadu Sports Hostel Admission details: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் சேர்ந்து விளையாட்டுகளில் பயிற்சி பெற பள்ளி மாணவ, மாணவியர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள் சேர்க்கைப் பெற்று பயிற்சி பெறலாம். இந்த விளையாட்டு மையங்களில் சேர்க்கைககான அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், … Read more

குழந்தை இல்லாத மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகள் முத்துலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அவருக்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை … Read more

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு சிறுமியின் தாய்மாமனான முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது … Read more

’இந்து தமிழ் திசை’ இணையதள செய்தி எதிரொலி: ஆதரவற்ற 3 சிறுவர்களுக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து, அடுத்த வேளை உணவுக்கே போராடிவரும் 3 சிறுவர்கள் குறித்து ’இந்து தமிழ் திசை’யின் இணைய தளத்தில் வெளியான செய்தி எதிரொலியாக, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவியின் பெயர் வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் … Read more

கன்னியாகுமரி: சந்தேகத்தின் பேரில் மனைவியை கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் ஜோஸ் (40). இவரது மனைவி வனஜா (33). இவர்களுக்கு மஞ்சு (13) அர்ச்சனா (11) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். வனஜா ஜோஸின் இரண்டாவது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்த ஜோஸ் சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகம் … Read more

இடைத்தேர்தலில் சத்ருகன் சின்ஹா, பாபுல் சுப்ரியோவை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் முடிவு செய்தது ஏன்?

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சத்ருகன் சின்ஹாவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பாலிகங்கேவை சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளராகவும் அறிவித்தார். பாபுல் சுப்ரியோ பாஜகவில் இருந்து விலகி, கடந்த ஆண்டு செப்டம்பரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சத்ருஹன் சின்ஹா இன்னும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. தேசிய அளவில் முழு வீச்சில் தலைவர்களைத் தேடும் திரிணாமூல் கங்கிரஸ் யஷ்வந்த் … Read more

சென்னை: முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா?

பாராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை பராமரிப்பு பணிகளுக்க காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: தாம்பரம்/ சித்தலப்பாக்கம் பகுதி: மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் 3வது தெரு, நேரு தெரு, ஐஸ்வரியா நகர், ஆர்.ஜி நகர் கடப்பேரி இலட்சுமிபுரம், ஓடப்பாளையம், பாரதிதாசன் தெரு, சாமுண்டிஸ்வரி நகர், ஸ்ரீபுரம், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் … Read more

முன்னாள் காதலிக்குத் தொல்லை.. தட்டிக்கேட்ட பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேறொருவரை திருமணம் செய்து கொண்ட காதலிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்தவன், அந்த பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த பெத்துகுமார் என்பவனும் சில ஆண்டுகளுக்கு முன் … Read more