ஸ்டாலின் ஸ்டிக்கர் செல்போனில் அண்ணாமலை செல்ஃபி: சிறுமி வைரல் போட்டோ

திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தன் தந்தையின் செல்போனில் ஒரு சிறுமி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நிமிடமும் பல புகைபடங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், சினிமா, டிவி, அரசியல், சமூகம் என பலவகையான புகைப்படங்களும் வீடியோக்களும் அடங்கும். தமிழக அரசியல் நடப்புகள் சமூக ஊடகங்களை பரபரப்பாக்க எப்போதும் தவறுவதில்லை. தமிழக அரசியலில் திமுகவினரும் பாஜகவினரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துக்கொண்டு … Read more

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. குழந்தை பலி… காவல்துறை தீவிர விசாரணை…!

குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டம் கொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். மாற்று திறளானியான அவர் அங்கு கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வீட்டில் இருந்த குருணை மருந்தை கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.  இதில் வரும் மயங்கிக் கிடந்தனர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர்,  உடனடியாக அவர்களை … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை மிரட்டிய இளைஞர் கூட்டாளிகளுடன் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த சிறுமியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். வாய்க்கால்ரோடு பகுதியைச் சேர்ந்த மௌலி ரஞ்சித் என்பவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். சிறுமி மறுக்கவே, சமூக வலைதளத்தில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து, ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான். சிறுமியை அச்சமூட்டுவதற்காக கத்தியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் அவருக்கு … Read more

நாமக்கல் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சி. வேலுச்சாமி. இவர் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி ஓட்டும் பெண் தொழிலாளி ஒருவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இச்சூழலில் கடன் பெற்ற தொழிலாளியின் மகளை கந்து … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு – தீபா, தீபக் சேர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீட்டு வழக்கில், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. WEALTH TAX எனும் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஜெயலலிதா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. அதில் தன்னை விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் மனுவை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 2008ஆம் ஆண்டு ஜெயலலிதாவை விடுவித்தது. அதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் … Read more

144 தடை மீறல் : இயக்குநர் கௌதமன் தூத்துக்குடியில் கைது

Director Gowthaman Arrested In Tuticorin Airport : தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தூத்தக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியில் பொதுச்செயலாளருமான வ.கௌதமன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில், குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில், உயிரிழந்த 4 பேருக்கு நடுக்கல் வழிவாடு செய்யவும், அங்கு காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற இயக்குநரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ.கௌதமனுக்கு அழைப்பு … Read more

மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக தொடங்கி வருகின்ற பருவ மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  சிங்காரச் சென்னை 2.o திட்டத்தின்கீழ் ரூ. 176.94  கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பணி  ஆணைகள்  மேயர் திருமதி.ஆர்.பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. கடந்த 2021 வடகிழக்கு பருவ மழையின்போது பெய்த கனமழையின் கரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு … Read more

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சம்பல், கொட்டக்குடி ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியூட்ரினோ திட்டத்திற்காக ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட உள்ளதால், பாறைகள் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மாநில … Read more

பல நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகம்; இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகம் – தமிழிசை கருத்து

நாமக்கல்: “பல்வேறு நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பல்வேறு நாடுகளில் மனநல … Read more

விவசாயிகளின் எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா?

விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வரும் சனிக்கிழமை அன்று வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை சேப்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் நிதி நிலை அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக 250-க்கும் மேற்பட்ட … Read more