குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்கள்! பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள்.!

குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை இன்று வழங்கினார். தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138, எம்.ஜி.ஆர் … Read more

தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர் “சஸ்பெண்ட்”

கடலூரில், தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அரசுப் பேருந்துகள் தரமற்ற உணவகங்களில் நிறுத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டிய உணவகங்களின் பட்டியலை போக்குவரத்து துறை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 10ந் தேதி, சென்னையில் இருந்து விருத்தாச்சலத்துக்குத் சென்ற அரசுப் பேருந்து, அங்கீகரிக்கப்படாத தரமற்ற உணவகத்தில் நிறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து பேருந்தின் நடத்துனர் சேட்டு மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Source … Read more

நெல் கொள்முதலுக்கு கட்டாய ஆன்லைன் பதிவை ரத்து செய்க: தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் சங்கம் 15 ஆலோசனைகள்

சென்னை: நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் எனபதை ரத்து செய்ய வேண்டும்; வேளாண் விளைப்பொருட்களை சேமித்து வைக்க தேவையான ஊராட்சிகளில் குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை, தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இச்சங்கம் இன்று வெளியட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் – உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள் … Read more

"சட்டத்தின் ஆட்சியே ஜெயகுமாரை கைது செய்தது" – ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது புழுதி வாரி வீசுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனையோ அவதூறு பேட்டிகளை ஜெயக்குமார் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பது திமுக தலைவர் காட்டிய பெருந்தன்மை எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என ஜெயக்குமார் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்தை … Read more

‘கழகம் காட்டிய அன்பு கீதா உபதேசம் போல உறுதியைத் தந்தது’ என்.ஆர் இளங்கோ எம்.பி உருக்கம்

மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதன், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஈ.சி.ஆர் சாலையில் கீழ்புதுப்பட்டு என்ற இடத்தில் வியாழக்கிழமை அதிகால நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததால் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ துயரத்தில் மூழ்கினார். அவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்த வழக்குரைஞரும், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் … Read more

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை தமிழர்களுக்கு இலவச தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியதோடு, மதுரை பால்பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த … Read more

கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் தமிழக அரசின் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்: வேல்முருகன் கண்டனம்

சென்னை: கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் தமிழக அரசின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது; தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்கு மராமத்துப் பணிகள் செய்ய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதன் பிறகே, ஊழியர்கள் … Read more

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது என்ன?

கார் இறக்குமதி வழக்கில் அபராதத்தை தள்ளுபடி செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை … Read more

கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம்… அமைச்சர் கே.என் நேரு – அடிகளார் சந்திப்பு சர்ச்சை

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்களாரு அடிகளாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் திமுக ஆதரவாளர்கள் மத்தியிலேயே விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது. கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம் என்று கே.என்.நேருவுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். கடவுள் மறுப்பை வலியுறுத்திய பெரியாரின் திராவிடர் கழகத்தின் இயக்கத்தின் நீட்சியான திமுகவில், முக்கியத் தலைவர்கள் அமைச்சர்கள் பலரும் தற்போது கோயில்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டு … Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சோகத்தில் ஆழ்த்திய மரணம்.!!

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமான அவரது மனைவி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மீனா சுவாமிநாதன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வேளாண் ஆய்வறிஞர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் திருமிகு. மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் … Read more