அம்மா உணவகங்களில் அகற்றப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்: ஆர்.பி. உதயகுமார் கண்டனம்

மதுரை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனிடையே, எந்த மாற்றமும் இல்லாமல் அம்மா உணவகம் செயல்படும் என முதல்வர் அறிவித்த அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள … Read more

தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்துகிறது – பாலகுருசாமி

தமிழ்நாடு புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் வாயிலாக அமல்படுத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். கல்வி பிரிவில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இத்தகைய யோசனைகள் ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை 2020இல் ஏற்கனவே உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். இது தொடர்பாக அவர் … Read more

பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!

வரும் பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு நல்லாட்சி நடத்தி இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்திவரும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டு கின்றோம். மேலும்,மார்ச் 18 ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளுக்கான … Read more

கோயம்பத்தூரில் கோயில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனம்.!

கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில்  எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். திருவிழாவில் பங்கேற்ற நடனக்குழுவினர் கொங்கு பகுதியின் புகழ்பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனத்தை ஆடினர். அவர்களுடன் சேர்ந்து எஸ்.பி.வேலுமணியும் நடனமாடினார். Source link

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பின் மழலையர் வகுப்புகள் திறப்பு: அரசுப் பள்ளியில் மகனைச் சேர்த்த கல்வித்துறை இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் இன்று திறந்தன. இச்சூழலில் அரசுப் பள்ளியில் தனது மகனை புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் சேர்த்தார். புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் முதல்முறையாக பள்ளிக்கு பெற்றோருடன் வந்தனர். அவர்களை ஆர்வமுடன் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து கரோனா நோய்த் தொற்றானது அதிகரித்ததால் படிப்படியாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. … Read more

பள்ளிகளில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் சேகரிப்பா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த விவரப் பதிவேட்டில் அவர்களது சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. அதில், பள்ளி மேம்பாட்டுக் குழுவுக்கான நிதி வழங்க ஏதுவாக 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அனுப்பாத பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா, பழங்குடி … Read more

உக்ரைன் போர்க்குற்றம்: ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது வழக்குத் தொடர வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இம்மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமின்றி இதற்கு முன்பு ஏற்படாத அளவில் அகதிகளாக மக்கள் தஞ்சமடைய வழிவகுத்தது. உக்ரைன் அதிபர் வோலோடோமிர் ஜெலென்ஸ்கி ஏபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி … Read more

நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.!

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் … Read more

தாய்மாமன் உருவச் சிலை மீது அமர்ந்து குழந்தைகளுக்கு காது குத்து விழா… திண்டுக்கல்லில் நடந்த உருக்கமான நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தப்பட்டது. வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீமற்றும் மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. பாண்டித்துரை இறந்ததால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது … Read more

தமிழக கல்வித் துறையில் புதிய திட்டங்கள்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டு

சென்னை: தமிழக கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினரும், இபிஜி அறக்கட்டளைத் தலைவருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் கல்வித் துறையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட பல திட்டங்களை கல்வியாளர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் ஆகியதிட்டங்கள் … Read more