தமிழக செய்திகள்
புதிதாக தேர்வான மேயர்களுக்கு ‘கடிவாளமா’? – அரசு சார்பில் உதவியாளர்களை நியமிக்க திட்டம்
மதுரை: சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 இடங்களில் திமுகவினர் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராக உள்ளார். இவர்களில் 11 பெண்கள் மேயர்களாக உள்ளனர். மேயர்களுக்கு கடந்த காலங்களில் மாநகராட்சி சார்பில் ஒருநேர்முக உதவியாளர், உதவியாளர், ஓட்டுநர், டபேதார் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதும் புதிதாக தேர்வான அனைத்து மேயர்களுக்கும் பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுவிட்டனர். நேர்முக உதவியாளர் மேயர்களுக்கு … Read more
பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் விரைவில் கள்ளுக் கடைகள் திறக்கப்படுமா? – விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு
நாகர்கோவில்: கேரளா உட்பட அண்டை மாநிலங்களில் இயற்கை பானமான கள் விற்பனை நடந்து வரும் நிலையில், பனை, தென்னை தொழில்களை பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துஉள்ளது. பனை மரங்கள் நுங்கு, பதநீர், கள் என இயற்கை பானங்களை கொடுப்பதுடன் நிலம், நீர்வளத்தைக் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோல், தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்கலாம். தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாப்பதில் காட்டும் ஆர்வம், பதநீர், கள் … Read more
தமிழகத்தில் இன்று 105 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 39 பேர்: 265 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,815. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,491. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more
தேனியில் காவல் நிலையம் எதிரே பூட்டப்பட்டிருந்த கடைகளில் தீ விபத்து.!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் 3 கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் தேவதானப்பட்டி காவல் நிலையம் எதிரே இருந்த உணவகத்தில் தீப்பிடித்து மளமளவென அருகே இருந்த கம்பியூட்டர் சென்டர் மற்றும் பெட்டிக்கடைக்கும் பரவியுள்ளது. தகவல் அறிந்து சென்ற பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் நீரைப்பாய்ச்சி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்து பின்னர் முற்றிலுமாக அணைத்தனர். Source link
பழநி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: மார்ச் 18-ல் தேரோட்டம்
பழநி: பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவந்து வழிபடத் துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி நடைபெறவுளளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருள அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற … Read more
”யாருடைய தலையீடும் இன்றி தனித்து செயல்படுகிறேன்” – தாம்பரம் மேயர் வசந்தகுமாரி
தன்னுடைய நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை தனித்து செயல்படுவதாக தாம்பரம் மேயர் தெரிவித்தார். சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது… மேயரின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என கேட்டதற்கு, தான் தனித்து, சுதந்திரமாக செயல்படுவதாகவும், யாருடைய தலையீடும் இல்லை, என்றார். சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியை உருவாக்க திட்டமிடல் குறித்து … Read more
உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி
உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவ, மாணவிகளின் கடைசி குழுவினரை சென்னை விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்ற பிறகு மத்திய அமைச்சர் ஜெயசங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் … Read more