தேனியில் காவல் நிலையம் எதிரே பூட்டப்பட்டிருந்த கடைகளில் தீ விபத்து.!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் 3 கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் தேவதானப்பட்டி காவல் நிலையம் எதிரே இருந்த உணவகத்தில் தீப்பிடித்து மளமளவென அருகே இருந்த கம்பியூட்டர் சென்டர் மற்றும் பெட்டிக்கடைக்கும் பரவியுள்ளது. தகவல் அறிந்து சென்ற பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் நீரைப்பாய்ச்சி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்து பின்னர் முற்றிலுமாக அணைத்தனர். Source link