தமிழக பாரம்பரிய உடை அணிந்து தஞ்சைப் பெரிய கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்

தஞ்சாவூர்: தமிழக பாரம்பரிய உடை அணிந்தபடி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிற்பகல் 3 மணிக்கு, புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கு சென்று அங்குள்ள அரிய வகை நூல்களை பார்வையிட்டார். அப்போது அவர் பேன்ட் சட்டை அணிந்திருந்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழக ஆளுநர் பட்டு வேட்டி, … Read more

கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது இடங்களில் மது அருந்தக் கூடாது என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியதாக 3112 பேர் மீது கடலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். … Read more

நாள் முழுவதும் சுகர் கண்ட்ரோல்… காலையில் இந்த ஜூஸ் குடிங்க!

Tamil Health Update : காலையில் எழுந்திருக்கும்போது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செயல்களுடன் தொடங்குவது நாள் முழுவதும் சரியான மனநிலையில் இருக்கும் ஒரு முயற்சி. மேலும், எழுந்தவுடன் உங்கள் உடலில் நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் உங்களுக்கு தென்படலாம். சிலர் அமிலத்தன்மையை உணர்வார்கள், சிலர் முகவீக்கம்,, உடல் ஆற்றல் குறைவு, எழுந்தவுடன் சூரிய ஒளியில் இருந்தாலும் கூட குளிரை உணர்வார்கள். இதனால் காலையில் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், உங்கள் … Read more

சாதி மத மோதலைத் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்..!

சாதி மோதல்களைச் சமூக ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரின் கடமை எனத் தெரிவித்தார்.  சமூக வலைத்தளத்தில் தகவல் தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்திச் சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் … Read more

மார்ச் 12: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,815 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

திருச்சி: இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி மாநகராட்சியில் இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதால் திமுக பெண் கவுன்சிலர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி, 56வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா தேவியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மஞ்சுளா தேவி இரண்டு இடங்களில் … Read more

தி.மு.க-வில் நம்பர் 3 செந்தில் பாலாஜி… மாற்றத்தை உணர்த்திய விறு விறு காட்சிகள்!

Tamilnadu News Update : அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சியில் வேகமாக வளர்ந்து வருவது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளின் திருமணத்தில் நடந்த நிகழ்வு தெளிவாக உணர்த்தியுள்ளது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. … Read more

இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.!

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள சுமார் 1 கோடியே 33 இலட்சம் நபர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகரட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-171, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் இன்று நடைபெற்ற 24ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் … Read more

திருந்த மாட்டோம்.. வருந்த மாட்டோம்.. பூரணி மம்மி ரிட்டர்ன்..! ரூ 700 க்கு எனர்ஜி தரிசனமாம்..!

சென்னையில் அடுத்தவர் கணவரை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான அன்னபூரணி எனர்ஜி தரிசனம் தருவதாக கூறி மீண்டும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை சவாரி செய்வது போல ஆடிக்கொண்டே தன்னை கடவுளின் அவதாரம் என்றும் திவ்ய தரிசனம் தருவதாக கூறி ஆசி வழங்கியதால் சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி..! இந்த செயல், இந்து கடவுளர்களை இழிவுபடுத்தும் செயல் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்த பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அன்னபூரணி … Read more

'எளிய மக்களுக்கு குறைந்த விலை வீடுகள்' – கட்டுமான நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மத்திய – மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் கட்டுநர்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் மத்திய – மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரத்தில், 30வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த அழைப்பிதழின் … Read more