கடைசி நேரத்தில் பம்மிய தி.மு.க போட்டி வேட்பாளர்கள்: அதிகாரபூர்வ வேட்பாளரை இழந்த அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்பதால் திருநெல்வேலியில் திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி போட்டியில் இருந்து பின்வாங்கினர். அதுமட்டுமல்ல, ஒரு வார்டில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரையும் இழந்தது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் … Read more

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். கடந்த வாரம் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற 21 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனிடையே இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய … Read more

சூடு பிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு.! <!– சூடு பிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குசே… –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு, காய்கறி, பால் விற்பனை செய்தும் வித விதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.. கரூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் காலில் விழுந்தும், பொன்னாடை போர்த்தியும் வாக்குகளை சேகரித்தனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிசர் … Read more

சட்டக் கல்வியின் தரத்தை ஒருபோதும் குறைக்க கூடாது: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

சென்னை: நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அளவுகோலையும், சட்டக் கல்வியின் தரத்தையும் ஒருபோதும் குறைக்கக் கூடாது என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.‘வேறு பணி செய்துவரும் பெண் ஒருவர், தனது வேலையை விட்டு விடாமல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளலாம்’ என்று குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய பார் கவுன்சில் மேல்முறையீடு செய்தது. அதில், ‘வருமானம் ஈட்டும் வேலையில் உள்ள யார் … Read more

நீட் விலக்கு மசோதா: அரசியல் கண் துடைப்பிற்காகவே இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் – பாஜக குற்றச்சாட்டு

Anti NEET Bill Tamil Nadu BJP MLAs stage walkout : நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அடையும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய திமுக கட்சி பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. நீதியரசர் A.K. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு இது குறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கை பெற்று, அதன் பின்பு தான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.09.2021ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. தமிழகம் முழுவதும் 57,778 வேட்பாளர்கள் போட்டி.!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த … Read more

ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் –>

நீட் விலக்கு மசோதா – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு நீட் விலக்கு மசோதா, முன்பு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது – அமைச்சர் நீட் தேர்வு அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது – அமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள் – அமைச்சர் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்தார் – அமைச்சர் … Read more

தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவர்: பேரவையில் விசிக எம்எல்ஏ பாலாஜி பேச்சு

சென்னை: “தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ பாலாஜி தெரிவித்தார். நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேசும்போது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை ஆகியவற்றை நிறைவேற்றி தந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுக்கு இல்லாத அக்கறை, தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்த சிலருக்கு வருகின்றது. தங்களது … Read more

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 6 மாதங்களில் 35 மான்கள் இறப்பு.. என்ன காரணம்?

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2021 ஜூலை முதல் டிசம்பர் வரை 35 மான்கள் இறந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதில், இரண்டு மான்கள் காசநோயாலும், இரண்டு மான்கள் பலவீனத்தாலும், நான்கு பல்வேறு நோய்களாலும், நான்கு மான்கள் பிளாஸ்டிக் உட்கொண்டதாலும் இறந்தன என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு கடித்த அடையாளங்கள் இருந்தன. சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வனத்துறைக்கு அனுப்பப்படாததால், மீதமுள்ள இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 617 ஏக்கர் … Read more