ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– ஆளுநரின் மதிப்பீடு தவறானது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் –>

நீட் விலக்கு மசோதா – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு நீட் விலக்கு மசோதா, முன்பு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது – அமைச்சர் நீட் தேர்வு அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது – அமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள் – அமைச்சர் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்தார் – அமைச்சர் … Read more

தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவர்: பேரவையில் விசிக எம்எல்ஏ பாலாஜி பேச்சு

சென்னை: “தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ பாலாஜி தெரிவித்தார். நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேசும்போது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை ஆகியவற்றை நிறைவேற்றி தந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுக்கு இல்லாத அக்கறை, தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்த சிலருக்கு வருகின்றது. தங்களது … Read more

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 6 மாதங்களில் 35 மான்கள் இறப்பு.. என்ன காரணம்?

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2021 ஜூலை முதல் டிசம்பர் வரை 35 மான்கள் இறந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதில், இரண்டு மான்கள் காசநோயாலும், இரண்டு மான்கள் பலவீனத்தாலும், நான்கு பல்வேறு நோய்களாலும், நான்கு மான்கள் பிளாஸ்டிக் உட்கொண்டதாலும் இறந்தன என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு கடித்த அடையாளங்கள் இருந்தன. சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வனத்துறைக்கு அனுப்பப்படாததால், மீதமுள்ள இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 617 ஏக்கர் … Read more

ஒன்றரை வயது குழந்தை மாயம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

ஒன்றரை வயது குழந்தை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பட்டு வருகிறது. இதில் வேலை செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் அங்கு தங்கி இருந்துள்ளனர். இதில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிஷோரின் ஒன்றரை … Read more

நீட் விலக்கு மசோதா | ஆளுநர் செய்தது அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

சென்னை: “தமிழக சட்டப்பேரவை கூடி கொள்கை அடிப்படையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது அடிப்படை அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது“ என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. சபாநாயகர் விவாதத்தைத் தொடங்கிவைக்க, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். … Read more

Tamilnadu Assembly Today LIVE: இன்று சட்டசபை சிறப்புக் கூட்டம்

Go to Live Updates Tamil Nadu Assembly News, Tamil Nadu Assembly LIVE Updates, 08 February 2022-தமிழக சட்டசபையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபையின் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் மற்றும் … Read more

மருத்துவ படிப்பு பொதுக் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது.!

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது, முதல் நாளில் விளையாட்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இது முடிந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 462 பேர் … Read more

நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு <!– நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணம் பேரூராட்சியின் 6-வது வார்டில் தி.மு.க. பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக பெண் வேட்பாளர் மணியரசியும், திமுக வேட்பாளர் பத்மா ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மணியரசி நேற்று திடீரென மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து திமுக வேட்பாளர் பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் ஒன்றாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வசந்தி நடேசன் என்பவரும், வேட்புமனுவை திரும்பப் பெற்றதால், … Read more

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் … Read more