4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன் படி, இந்த மாதம் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  காலை 7 மணி முதல் பகல் … Read more

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நிரந்தர வைப்பீடாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது நடிகர் விஷாலின் நிறுவனம், படத் தயாரிப்புக்காக பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா செலுத்தியிருந்தது தொகையை செலுத்தாமல் “வீரமே வாகை சூடும்” படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமையை விற்க தடை … Read more

அசாம் இளைஞர் ரயிலில் திடீரென உயிரிழப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை

திருப்பூர்: அசாம் மாநில இளைஞர் ரயிலில் உயிரிழந்த நிலையில், சில மணிநேர பயணத்துக்கு பின் அவரது உடல் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை 10.45 மணிக்கு திருப்பூருக்கு வந்தடைந்தது. ரயிலில் எஸ்.3 பெட்டியில் இருந்து 2 … Read more

கோவை: ஆசிரம உரிமையாளரை கடத்தி ரூ.35 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பல்

கோவையில் தனியார் ஆசிரம உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடந்தி ரூ.35 லட்சம் பணத்தை பறித்து தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ஈரோடு மாவட்டத்தில் புலிப்பாணி சித்தர் மடம் வைத்து நடத்தி வருகிறார். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கோவை வரும் இவர், கடந்த 7 ஆம் தேதி வழக்கம்போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் 8-ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது வேனில் வந்த … Read more

Air Raid Alerts: உக்ரைன் மக்களின் உயிரை காப்பாற்றும் கூகுளின் புதிய சேவை

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பல இடங்களில் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் மக்களின் உயிரை காப்பாற்ற கூகுள் நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் ஏர் ரெய்டு அலர்ட் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது. இது நாட்டில் தற்போதுள்ள வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளுக்கு துணையாக செயல்படும் என்றும், அரசு தரப்பில் வழங்கப்படும் … Read more

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.!

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.                          இன்று விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி … Read more

உச்சநீதிமன்ற பிணை ஆணை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ; மீண்டும் வீடு திரும்பினார் பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பிணை ஆணையின் நகல் புழல் சிறைச்சாலை அதிகாரிகளை வந்தடையாததால் அவர் தொடர்ந்து பரோலில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு, புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வழங்கிய பரோலை ரத்து செய்ய, பேரறிவாழன் திருப்பத்தூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் உச்சநீதிமன்ற ஆணையின் நகல் இன்னும் புழல் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் … Read more

தமிழக ஆளுநர் தஞ்சை வருகை: முறையான இட ஒதுக்கீடு கோரி முன்னாள் படைவீரர்கள் மனு

தஞ்சாவூர்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தார். தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஆளுரை முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கத்தினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, அரசுத் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பின்பற்றப்படுவதில்லை. … Read more

‘சமூகவலைத்தள வன்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்’ – முதலமைச்சர் அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவிடுவோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை குறைப்பதைவிட, அவை நடக்காமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் மதமோதல்களை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமூகவலைத்தளத்தை நல்லதுக்கும், … Read more

TNPSC குரூப் 2,2ஏ தேர்வு விண்ணப்பம்; தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

TNPSC group 2 exam chances to correct errors in application: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்துகொள்ள விரும்பினால், மார்ச் 23 வரை திருத்திக் கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் … Read more