சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி.! <!– சென்னையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் … –>

சென்னை வேளச்சேரியில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இன்று காலை வேளச்சேரி 100 அடி சாலையில் கஸ்தூரி என்பவர் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். சாலையின் இருபுறத்தை சரிவர கவனிக்காமல் கஸ்தூரி சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் … Read more

பிப்ரவரி 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.6 வரை பிப்.7 பிப்.6 … Read more

பீஸ்ட் படத்தின் முதல் பாடல்… அரபிக் குத்து; ரிலீஸ் எப்ப தெரியுமா?

Beast first single Arabic Kuthu: Vijay, Sivakarthikeyan, Nelson Dilpkumar, Anirudh Ravichander unite for a funny skit: விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி … Read more

ஒரு பேரூராட்சியை இழந்த திமுக.! தேர்தலுக்கு முன்பே 11 வேட்பாளர்கள் வெற்றி.! பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்வு.?!

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், சிலர் கடந்த இரு தினங்களாக தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தனர். இன்று வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான நேரம் … Read more

ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகம்.. விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட பாட்டி.. <!– ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்… –>

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  தினவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் – ரோசம்மாள் தம்பதியின் மகள் வழி பேரனான ஜெகன், சிறு வயது முதலே பாட்டி தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற ஜெகனுக்கு இதய கேளாறு காரணமாக உடல் நலக்குறைவு … Read more

பிப்ரவரி 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை: ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

Cong ‘instigated’ labourers to breach lockdown…poll defeats didn’t dent party’s ego: PM Modi: 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி அத்துமீறிய மருத்துவர்.. சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆபாச வீடியோ காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில்  பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது டாக்டர் மோகன்குமார் என்பவர் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். … Read more

சாலையோர சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்.. விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு <!– சாலையோர சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்….. –>

திருப்பூர் அருகே சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொல்லிக்காளிபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையின் சாக்கடை கால்வாயில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூட்கேஸை மீட்டதுடன், அதன் உள்ளே கழுத்து அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 முதல் 35 … Read more

கொடநாடு விவகாரத்தில் உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “முன்பு முதலமைச்சராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார்? அதனை அவரால் பட்டியல் போட முடியுமா? நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் … Read more