'கெத்தா' சுற்றிக்கொண்டிருந்த காட்டெருமைக்கு நேர்ந்த பரிதாபம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காணிக்கைராஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதி ஆகும். இந்த வனங்களில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் இந்த வன லிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அருவங்காடு அருகே உள்ள காணிக்கைராஜ் … Read more

Tamil News Today LIVE: மகளிர் உலகக் கோப்பை.. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை விடுதலையானார். என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. ஜெயக்குமார் பேட்டி என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சித்தனர் . திமுக அரசு’ ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் … Read more

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் வேலைவாய்ப்பு.!!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மூத்த திட்ட அலுவலர், திட்ட இணை காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் பணியின் பெயர் : மூத்த திட்ட அலுவலர், திட்ட இணை கல்வித்தகுதி … Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நாளையும், நாளை மறுநாளும் தென் தமிழக மாவட்டங்களில் … Read more

அரசுப் பள்ளி மாணவரின் உடல்நல விவரங்களை சேகரிப்பது ஏன்? – பள்ளிக்கல்வி துறை விளக்கம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதியே உடல்நலம் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுய விவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், கற்றல் செயல்பாடுகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிடையே, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மாணவர்கள் உடல்நலம் சார்ந்த தகவல்களையும் … Read more

முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரிபோல் நடந்துகொள்கிறார் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக பிரமுகரை தாக்கியது, போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் பிணை கிடைத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து இன்று காலை புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாகத்தில் குவிந்து அவரை வரவேற்றனர். … Read more

‘தாயகம் வந்தது அதிசயம்… சிக்கிக்கொண்ட பயத்தில் இருந்தோம்’ சுமி மாணவர்களின் வேதனை குரல்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்க சென்ற மூன்று விமானங்களில், முதல் விமானம் 242 இந்தியர்களுடன் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தது. அதில் வந்த, சுமி மாநில பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவரான மோஹித் குமார் கூறுகையில், தாயகம் வந்தது அதிசயம். போரை, ஹாஸ்டல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தது மிகவும் விசித்திரமானது. தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடைபெற்றது. ஒவ்வொரு 4-5 … Read more

சென்னையில் முக்கிய பகுதியில் இன்று மின் தடை..!

பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, … Read more

ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

சென்னை அடுத்த புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தார். நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, 20 நாட்களாக சிறையில் இருந்த ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  விடுதலையான ஜெயக்குமாருக்கு சிறை வாசலிலும், வீட்டிலும் திரளான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Source link

அரசு மருத்துவமனைகளில் இனி ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனையில் இனி ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்,ரூ.2.44 கோடியில் ‘வாழ்வூட்டும்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிதுறை’யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் … Read more