மதுரையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அமைத்த ஏ.பி.முத்துமணி மறைவு.. அவரது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் இரங்கல்.!
மதுரை மாவட்டத்தில் தமக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த மறைந்த ஏ.பி.முத்துமணியின் குடும்பத்தாரிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் ஆறுதல் கூறினார். கடந்த 8ஆம் தேதி இரவு மதுரை மாநகர ரஜினி ரசிகர் மன்ற கௌரவ ஆலோசகர் ஏ.பி.முத்துமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவருடைய மனைவியிடம் தொலைபேசி வழியாக பேசிய ரஜினி, முத்துமணி இழப்பு பெரிய வருத்தத்தை அளிக்கிறது எனவும் அவருடைய மறைவிற்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். … Read more